தரவு அணுகலுக்கும் நீக்குதலுக்குமான வெளிப்படைத்தன்மை அறிக்கை

Googleளின் தனியுரிமைக் கொள்கை மற்றும் தனியுரிமை உதவி மையத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பயனர்கள் தங்கள் தகவல்களை மாற்ற, நிர்வகிக்க, அணுக, திருத்த, ஏற்ற, நீக்க மற்றும் Googleளின் சேவைகள் முழுவதும் தங்கள் தனியுரிமையைக் கட்டுப்படுத்த ஏராளமான கருவிகளை வழங்குகிறோம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான அமெரிக்கப் பயனர்கள் Googleளின் உங்கள் தரவைப் பதிவிறக்குங்கள் அம்சத்தைப் பயன்படுத்துகின்றனர். மேலும் Googleளின் எனது செயல்பாடு அம்சத்தைப் பயன்படுத்தி தங்களுடைய சில தகவல்களை நீக்குகின்றனர். பயனர்கள் Googleளின் சேவைகள் முழுவதிலும் பார்க்க, பதிவிறக்க, நீக்க விரும்பும் குறிப்பிட்ட தரவு வகைகளைத் தேர்ந்தெடுக்க இந்தக் கருவிகள் அனுமதிக்கின்றன. பயனர் கோரிக்கைகள் தானாகவே செயலாக்கப்படும். மேலும், கலிஃபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டம் (California Consumer Privacy Act - CCPA) போன்ற குறிப்பிட்ட தனியுரிமைச் சட்டங்கள் வழங்கும் உரிமைகளைப் பெற பயனர்கள் Googleளைத் தொடர்புகொள்ளலாம்.

2023ல் இந்தக் கருவிகள், தொடர்புகொள்ளும் முறைகள் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கூடுதல் தகவல்கள் உள்ளன:

கோரிக்கை வகைகோரிக்கைகளின் எண்ணிக்கைமுழுமையாகவோ பகுதிஅளவிலோ நிறைவுசெய்யப்பட்ட கோரிக்கைகள்ஏற்றுக்கொள்ளப்படாத கோரிக்கைகள்***விரிவான பதிலுக்கான சராசரி நேரம்
எனது தரவைப் பதிவிறக்கு என்பதன் பயன்பாடு*தோராயமாக 8.8 மில்லியன்தோராயமாக 8.8 மில்லியன்பொருந்தாது (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)1 நாளுக்கும் குறைவு (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)
எனது செயல்பாடுகளை நீக்குதல் என்பதன் பயன்பாடு*தோராயமாக 60.6 மில்லியன்தோராயமாக 60.6 மில்லியன்பொருந்தாது (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)1 நாளுக்கும் குறைவு (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)
தெரிந்துகொள்வதற்கான கோரிக்கைகள் (Googleளைத் தொடர்புகொள்வதன் மூலம்)**42442226 நாட்கள்
நீக்குவதற்கான கோரிக்கைகள் (Googleளைத் தொடர்புகொள்வதன் மூலம்)**323207 நாட்கள்
திருத்துவதற்கான கோரிக்கைகள் (Googleளைத் தொடர்புகொள்வதன் மூலம்)**000பொருந்தாது

தனியுரிமைக் கொள்கையில் விவரித்துள்ளபடி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை Google விற்பதில்லை. மேலும், CCPA பாதுகாக்கவேண்டியதாகக் கருதும் தனிப்பட்ட தகவல்களை CCPA அனுமதிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே Google பயன்படுத்தும். அதுபோலவே, தனிப்பட்ட தகவல்கள் விற்கப்படுவதற்கான ஒப்புதலை நீக்கவோ, தங்களது பாதுகாக்கவேண்டிய தனிப்பட்ட தகவல்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவோ பயனர்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும்போது எங்கள் நடைமுறைகளையும் நாங்கள் வழங்கும் உறுதிகளையும் விளக்குவதன் மூலம் அந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்போம். Googleளுக்கு வெளியே அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படக்கூடிய சில சூழல்கள், அத்தகைய பகிர்வின்போது அவர்களிடமுள்ள கட்டுப்பாடுகள், அவர்கள் பயன்படுத்தும் Google சேவையைப் பொறுத்து, பாதுகாக்கவேண்டிய தகவல்களின் சேகரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பாக அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் கட்டுப்பாடுகள் ஆகிய தகவல்களையும் பயனர்களுக்கு வழங்குகிறோம்.

* அமெரிக்காவில் வசிக்கும் பயனர்களுக்கான தரவு

** கலிஃபோர்னியாவில் வசிப்பதாகத் தங்களை அடையாளப்படுத்தும் பயனர்களுக்கான தரவு

*** 2023ல் நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு கோரிக்கையும், சரிபார்க்கப்பட முடியவில்லை என்பதாலோ கோரிக்கையைப் பயனர் திரும்பப்பெற்ற காரணத்தாலோதான் நிராகரிக்கப்பட்டது

Google ஆப்ஸ்
முதன்மை மெனு