Google இன் கூட்டாளர்கள் யார்?

வணிகங்களுடனும் நிறுவனங்களுடனும், Google பல்வேறு வழிகளில் பணியாற்றுகிறது. இந்த வணிகங்களையும் நிறுவனங்களையும் "கூட்டாளர்கள்" என்று குறிப்பிடுகிறோம். எடுத்துக்காட்டாக, சுமார் 2 மில்லியன் Google அல்லாத இணையதளங்களும் பயன்பாடுகளும், விளம்பரங்களைக் காட்ட, Google உடன் கூட்டாளராகின்றன. மில்லியன் கணக்கான டெவெலப்பர் கூட்டாளர்கள், அவர்களது பயன்பாடுகளை Google Play இல் வெளியிடுகின்றனர். பிற கூட்டாளர்கள், எங்கள் சேவைகளைப் பாதுகாப்பதில் Googleக்கு உதவுகின்றனர்; பிறர் உங்கள் கணக்கைப் பயன்படுத்துவதாக நாங்கள் நினைத்தால், அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிக்க (இந்தச் சமயத்தில், உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுவோம்) பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல் உதவும்.

நம்பகமான வணிகங்களுடன் கூட்டாளர்கள் என்பதற்குப் பதிலாக "தரவுச் செயலாக்கம்" என்று பணியாற்றுவோம், அதாவது எங்கள் வழிமுறைகளின் அடிப்படையிலும் எங்கள் தனியுரிமைக் கொள்கை மற்றும் பிற பொருத்தமான இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணங்கியும், எங்கள் சேவைகளை ஆதரிக்க, எங்கள் சார்பாக அவர்கள் தகவலைச் செயல்படுத்துகின்றனர். தரவுச் செயலாக்கத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றிய மேலும் தகவல்கள் தனியுரிமைக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளன.

தகவலைப் பகிர நீங்கள் கேட்கும் வரை, எங்கள் விளம்பரக் கூட்டாளர்களுடன், உங்கள் பெயர் அல்லது மின்னஞ்சல் போன்ற உங்களைத் தனிப்பட்டு அடையாளங்காட்டும் தகவலைப் பகிர மாட்டோம். எடுத்துக்காட்டாக, அருகிலுள்ள பூக்கடைக்கான விளம்பரத்தைப் பார்த்து, "அழைக்க, தட்டவும்" எனும் பொத்தானைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் அழைப்பை இணைத்து, உங்கள் ஃபோன் எண்ணை, பூக்கடையுடன் நாங்கள் பகிரக்கூடும்.

கூட்டாளர்களிடமிருந்து சேகரிக்கும் தகவல் உட்பட, Google சேகரிக்கும் தகவலைப் பற்றி தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் மேலும் படிக்கலாம்.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு