முக்கிய வார்த்தைகள்

அல்காரிதம்

சிக்கலைத் தீர்க்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் கணினி பின்பற்றும் செயல்முறை அல்லது விதிமுறைகளின் தொகுப்பு.

உலாவி இணையச் சேமிப்பகம்

உலாவி இணையச் சேமிப்பகமானது, சாதனத்தில் உள்ள உலாவியில் தரவினைச் சேமிக்க இணையதளங்களை அனுமதிக்கிறது. "அகச் சேமிப்பகம்" பயன்முறையில் பயன்படுத்தும் போது, அமர்வுகள் முழுவதும் தரவைச் சேமிப்பதை அது இயக்குகிறது. இதன் மூலம், உலாவி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும்போதும், தரவை மீட்டெடுக்க முடியும். HTML 5 என்பது இணையச் சேமிப்பகத்தைப் பயன்படுத்த உதவும் தொழில்நுட்பம் ஆகும்.

குக்கீகள்

குக்கீ என்பது நீங்கள் ஒரு இணையதளத்தைப் பார்வையிடும் போது, உங்கள் கணினிக்கு அனுப்பப்படும் எழுத்துகளின் சரத்தைக் கொண்ட சிறிய கோப்பு ஆகும். தளத்திற்கு மீண்டும் செல்லும் போது, அந்தத் தளம் உங்கள் உலாவியை அடையாளைங்காண குக்கீ அனுமதிக்கிறது. பயனர் விருப்பத்தேர்வுகளையும் பிற தகவலையும் குக்கீகள் சேமிக்கக்கூடும். எல்லா குக்கீகளைப் புறக்கணிக்கும்படியும் அல்லது குக்கீயை அனுப்பும் போது தெரிவிக்கும்படியும் உங்கள் உலாவியை உள்ளமைக்கலாம். எனினும், சில இணைய அம்சங்கள் அல்லது சேவைகள் குக்கீகள் இல்லாமல் சரியாக இயங்காமல் போகலாம். குக்கீகளை Google எவ்வாறு பயன்படுத்துகிறது மற்றும் நீங்கள், எங்கள் கூட்டாளர்களின் தளங்கள் அல்லது பயன்பாடுகளைப் பயன்படுத்தும்போது குக்கீகள் உள்ளிட்ட தரவை Google எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மேலும் அறியவும்.

கூட்டு நிறுவனங்கள்

கூட்டு நிறுவனம் என்பது Google குழும நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகும். அவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுகர்வோர் சேவைகளை வழங்கும் பின்வரும் நிறுவனங்களும் அடங்கும்: Google Ireland Limited, Google Commerce Ltd, Google Payment Corp மற்றும் Google Dialer Inc. ஐரோப்பிய ஒன்றியத்தில் வணிகச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பற்றி மேலும் அறியவும்.

சாதனம்

சாதனம் என்பது Google சேவைகளை அணுகுவதற்குப் பயன்படுத்தக் கூடிய கணினி ஆகும். எடுத்துக்காட்டாக, டெஸ்க்டாப் கணினிகள், டேப்லெட்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் போன்ற அனைத்தும் சாதனங்களாகும்.

சேவையகப் பதிவுகள்

பெரும்பாலான வலைத்தளங்கள் போல, தளங்களைப் பார்வையிடும் போது எங்கள் சேவையகங்கள் தானாகவே பக்கக் கோரிக்கைகளைப் பதிவு செய்யும். இந்த “சேவையக பதிவுகள்” வலை கோரிக்கை, இணைய நெறிமுறை முகவரி, உலாவி வகை, உலாவி மொழி, உங்கள் கோரிக்கையின் தேதியும் நேரமும் மற்றும் உங்கள் உலாவியை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குக்கீகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

“கார்கள்” என்பதற்கான தேடலுக்கான பதிவு உள்ளீடு இது போன்று இருக்கும்:

123.45.67.89 - 25/Mar/2003 10:15:32 -
http://www.google.com/search?q=cars -
Chrome 112; OS X 10.15.7 -
740674ce2123e969
  • 123.45.67.89 பயனரின் ISP ஆல் பயனருக்கு ஒதுக்கப்பட்ட ஐபி அட்ரெஸ் ஆகும். பயனரின் சேவையைப் பொறுத்து, அவர் ஒவ்வொரு முறை இணையத்துடன் இணைக்கும்போதும் சேவை வழங்குநரின் மூலம் வெவ்வேறு முகவரி ஒதுக்கப்படலாம்.
  • 25/Mar/2003 10:15:32 வினவலின் தேதி மற்றும் நேரம்.
  • http://www.google.com/search?q=cars தேடல் வினவல் உட்பட, கோரப்பட்ட URL.
  • Chrome 112; OS X 10.15.7 பயன்படுத்தப்படும் உலாவி மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகும்.
  • 740674ce2123a969 இந்தக் குறிப்பிட்ட கணினிக்கு, முதல் முறையாக அது Google இல் பார்வையிட்ட போது ஒதுக்கிய தனிப்பட்ட குக்கீ ஐடி ஆகும். (பயனர்கள் குக்கீகளை நீக்கலாம். பயனர் கணினியின் மூலம் கடைசியாக Google இல் பார்வையிட்ட வரையுள்ள குக்கீகளை நீக்கினால், அடுத்த முறை அந்தக் குறிப்பிட்ட சாதனத்தில் இருந்து Google இல் பார்வையிடும் போது, அது இந்தச் சாதனத்திற்கான தனிப்பட்ட குக்கீ ஐடியாக இருக்கும்).

தனிப்பட்ட அடையாளங்காட்டிகள்

தனித்துவமான அடையாளங்காட்டி என்பது, உலாவி, பயன்பாடு அல்லது சாதனத்தை தனித்துவமாக அடையாளங்காணப் பயன்படுத்தக்கூடிய எழுத்துகளின் சரமாகும். பல்வேறு அடையாளங்காட்டிகளானவை, அவை எவ்வளவு நிலைத்தன்மையோடு உள்ளன என்பதில், பயனர்கள் அவற்றை மீட்டமைப்பது மற்றும் அவற்றை அணுகுவதைப் பொறுத்து மாறுபடுகின்றன.

தனித்துவமான அடையாளங்காட்டிகளை, பாதுகாப்பு மற்றும் மோசடியைக் கண்டறிதல், பயனரின் மின்னஞ்சல் இன்பாக்ஸ் போன்ற சேவைகளை ஒத்திசைத்தல், பயனரின் விருப்பங்களை நினைவில் வைத்து அவற்றிற்கு தொடர்பான விளம்பரங்களைக் காட்டுதல் உட்பட, பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, குக்கீகளில் சேமிக்கப்பட்ட தனித்துவமான அடையாளங்காட்டிகள், உங்கள் உலாவியில், தளங்கள் நீங்கள் விரும்பும் மொழியில் உள்ளடக்கத்தைக் காட்டுவதற்கு உதவுகின்றன. எல்லா குக்கீகளைப் புறக்கணிக்கும்படியும் அல்லது குக்கீயை அனுப்பும் போது தெரிவிக்கும்படியும் உங்கள் உலாவியை உள்ளமைக்கலாம். Google குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி மேலும் அறியவும்.

உலாவிகளைத் தவிர பிற இயங்குதளங்களில், குறிப்பிட்ட சாதனம் அல்லது அந்தச் சாதனத்தில் உள்ள பயன்பாட்டை அடையாளங்காண தனித்துவமான அடையாளங்காட்டிகள் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, விளம்பர ஐடி போன்ற தனித்துவமான அடையாளங்காட்டியானது, Android சாதனங்களில் தொடர்புடைய விளம்பரங்களை வழங்கப் பயன்படுகிறது, மேலும் இதை உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் நிர்வகிக்க முடியும். மொபைல் ஃபோனின் IMEI போன்ற தனித்துவமான அடையாளங்காட்டிகள் அவற்றின் உற்பத்தியாளர்களால் சாதனத்தில் இணைக்கப்படலாம் (சில நேரங்களில் உலகளாவிய தனித்துவமான ஐடி அல்லது UUID என்று அழைக்கப்படும்). எடுத்துக்காட்டாக, சாதனத்தின் தனித்துவமான அடையாளங்காட்டியானது, உங்கள் சாதனத்திற்கான எங்கள் சேவையைத் தனிப்பயனாக்கவோ அல்லது எங்கள் சேவைகள் சார்ந்த சாதனத்தின் சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்யவோ பயன்படுத்தப்படலாம்.

தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்

இந்தத் தகவல் பயனர்களைப் பற்றி பதிவுசெய்யப்பட்டதாகும். எனவே இது தனிபட்ட முறையில் அடையாளம் காணும் பயனரை இனி பிரதிபலிக்காது அல்லது குறிப்பிடாது.

தனிப்பட்டத் தகவல்

உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது பில்லிங் தகவல் அல்லது உங்கள் Google கணக்கில் நாங்கள் தொடர்புபடுத்திய தகவல் போன்ற Google ஆல் இணைக்கப்பட்ட பிற தரவு போன்ற நீங்கள் வழங்கிய தகவல்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும்.

நுட்பமான தனிப்பட்ட தகவல்

இது ரகசிய மருத்துவ உண்மைகள், இனத் தோற்றம், அரசியல் அல்லது மதம் சார்ந்த நம்பிக்கைகள் அல்லது பாலுணர்வு போன்ற தலைப்புகள் தொடர்பான தனிப்பட்ட தகவலின் குறிப்பிட்ட வகையாகும்.

பயன்பாட்டுத் தரவுத் தேக்ககம்

பயன்பாட்டுத் தரவுத் தேக்ககம் என்பது சாதனத்தில் உள்ள தரவுக் களஞ்சியம் ஆகும். இணைய இணைப்பு இல்லாமல் இணையப் பயன்பாட்டை இயக்குவது மற்றும் உள்ளடக்கத்தை வேகமாக ஏற்றுவதன் மூலம் பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துவது போன்றவற்றை இதனால் செய்ய முடியும்.

பிக்சல் குறிச்சொல்

பிக்சல் குறிச்சொல் என்பது, இணையதளத்தின் பார்வைகள் அல்லது மின்னஞ்சலைத் திறப்பது போன்ற சில செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு, இணையதளத்தில் அல்லது மின்னஞ்சலின் பொருளில் வைக்கப்படும் தொழில்நுட்பமாகும். பிக்சல் குறிச்சொற்கள் பெரும்பாலும் குக்கீகளுடன் சேர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

ரெஃபரர் URL

ரெஃப்ரர் URL (சீரான ஆதார இருப்பிடங்காட்டி) என்பது, பொதுவாக இணையப்பக்கத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யும்போது, இணைய உலாவி மூலம் இலக்கு இணையப்பக்கத்திற்குப் பரிமாற்றப்படும் தகவலாகும். ரெஃபரர் URL இல், உலாவியில் கடைசியாகப் பார்வையிட்ட இணையப்பக்கத்தின் URL இருக்கும்.

Google கணக்கு

Google கணக்கிற்குப் பதிவுசெய்து, சில தனிப்பட்ட தகவலை (பொதுவாக உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்) எங்களுக்கு வழங்குவதன் மூலம், எங்கள் சேவைகளில் சிலவற்றை நீங்கள் அணுகலாம். இந்தக் கணக்குத் தகவல், Google சேவைகளை நீங்கள் அணுகும் போது உங்களை அங்கீகரிக்கவும் பிறரின் அங்கீகாரமற்ற அணுகலில் இருந்து உங்களைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. உங்கள் Google கணக்கு அமைப்புகளின் மூலம், எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கைத் திருத்தலாம் அல்லது நீக்கலாம்.

IP முகவரி

இணையத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும், இணைய நெறிமுறை (ஐபி) முகவரி எனப்படும் எண் ஒதுக்கப்படும். இந்த எண்கள் பொதுவாக நாடு-சார்ந்த பகுதிகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும். ஐபி முகவரியானது, சாதனம் இணையத்திற்கு இணைக்கும் இருப்பிடத்தினை அடையாளங்காணப் பொதுவாகப் பயன்படுத்தப்படும். இருப்பிடத் தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவோம் என்பது குறித்து மேலும் அறிக.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு