ஆன்லைனில் பயனர்களின் தனியுரிமையை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்கும் நோக்கத்தில், டிஜிட்டல் விளம்பரங்களை வழங்குவதையும் அளவிடுவதையும் மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை Chrome, Android ஆகியவற்றில் தனியுரிமை சாண்ட்பாக்ஸ் முன்னெடுப்புத் திட்டத்தின் மூலம் Google விளம்பரச் சேவைகள் பரிசோதித்து வருகின்றன. Chrome அல்லது Androidல் தொடர்புடைய தனியுரிமை சாண்ட்பாக்ஸ் அமைப்புகளை இயக்கியுள்ள பயனர்களுக்கு, அவர்களது உலாவி அல்லது மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள Topics அல்லது Protected Audience தரவின் அடிப்படையில் Googleளின் விளம்பரச் சேவைகள் மூலம் தொடர்புடைய விளம்பரங்கள் காட்டப்படலாம். மேலும், அவர்களது உலாவிகளிலோ மொபைல் சாதனங்களிலோ சேமிக்கப்பட்டுள்ள Attribution Reporting தரவைப் பயன்படுத்தியும் விளம்பரச் செயல்திறனை Googleளின் விளம்பரச் சேவைகள் அளவிடக்கூடும். தனியுரிமை சாண்ட்பாக்ஸ் குறித்த கூடுதல் தகவல்கள்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள் அல்லது பயன்பாடுகளின் தகவலை Google பயன்படுத்தும் முறை

பல இணையதளங்களும் பயன்பாடுகளும், அவற்றின் உள்ளடக்கத்தை மேம்படுத்த மற்றும் வெளிப்படையாகக் காட்ட, Google சேவைகளைப் பயன்படுத்துகின்றன. அவை எங்கள் சேவைகளை ஒருங்கிணைக்கும் போது, இந்தத் தளங்களும் பயன்பாடுகளும் தகவலை Google உடன் பகிரும்.

எடுத்துக்காட்டாக, Google Analytics போன்ற பகுப்பாய்வுக் கருவிகள் உட்பட AdSense போன்ற விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தும் அல்லது YouTube இலிருந்து வீடியோ உள்ளடக்கத்தை உட்பொதிக்கும் இணையதளத்தைப் பார்வையிடும் போது, உங்கள் இணைய உலாவியானது குறிப்பிட்ட தகவலை Googleக்கு அனுப்பும். நீங்கள் பார்வையிடும் பக்கத்தின் URL மற்றும் உங்கள் IP முகவரி இதில் அடங்கும். உங்கள் உலாவியில் நாங்கள் குக்கீகளை அமைக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள குக்கீகளைப் படிக்கலாம். Google விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தும் பயன்பாடுகளும், பயன்பாட்டின் பெயர், விளம்பரத்திற்கான தனிப்பட்ட அடையாளங்காட்டி போன்ற தகவலை Google உடன் பகிரும்.

எங்கள் சேவைகளை வழங்குவதற்கும், அவற்றைப் பராமரித்து மேம்படுத்துவதற்கும், புதிய சேவைகளை உருவாக்குவதற்கும், விளம்பரத்தின் செயல்திறனை அளவிடுவதற்கும், மோசடி மற்றும் முறைகேட்டிலிருந்து பாதுகாக்கவும், Google மற்றும் எங்கள் கூட்டாளர் தளங்கள் மற்றும் பயன்பாடுகளில் நீங்கள் பார்க்கும் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் தனிப்பயனாக்கவும், தளங்கள் மற்றும் பயன்பாடுகள் மூலம் பகிரப்பட்ட தகவலை Google பயன்படுத்தும். இவற்றில் ஒவ்வொரு நோக்கத்திற்குமான தரவை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறிய, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும், மேலும் Google விளம்பரங்கள், விளம்பரச் சூழலில் உங்கள் தகவல் எப்படிப் பயன்படுத்துப்படுகின்றன மற்றும் இந்தத் தகவலை எவ்வளவு காலத்திற்கு Google சேமிக்கும் என்பது பற்றி மேலும் அறிய, எங்கள் விளம்பரப் பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் தகவல்களைச் செயலாக்க Google சார்ந்திருக்கும் சட்டப்பூர்வக் காரணங்களை எங்களின் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது — உதாரணமாக, உங்கள் ஒப்புதலின் பேரிலோ அல்லது எங்கள் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சேவைகளை வழங்குதல், பராமரித்தல், மேம்படுத்துதல் போன்ற நியாயமான நலநோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவோ உங்கள் தகவல்களை நாங்கள் செயலாக்கக்கூடும்.

சிலசமயங்களில், தளங்களிலும் ஆப்ஸிலும் பகிர்ந்த தகவல்களைச் செயலாக்கும்போது அந்தத் தளங்களும் ஆப்ஸும் தகவல்களைச் செயலாக்குவதற்கு Googleளை அனுமதிக்கும் முன்பு உங்கள் ஒப்புதலைக் கேட்கும். உதாரணத்திற்கு, தளம் சேகரிக்கும் தகவல்களை Google செயலாக்குவதற்கான ஒப்புதலைக் கேட்டு பேனர் ஒன்று தளத்தில் தோன்றக்கூடும். அவ்வாறு நிகழும்போது Google தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்ட சட்டப்பூர்வக் காரணங்களை விட தளத்திற்கோ ஆப்ஸிற்கோ நீங்கள் அளித்த ஒப்புதலில் விளக்கப்பட்ட காரணங்களுக்கு நாங்கள் மதிப்பளிப்போம். உங்கள் ஒப்புதலை மாற்றவோ திரும்பப் பெறவோ விரும்பினால் சம்பந்தப்பட்ட தளத்திற்கோ ஆப்ஸிற்கோ செல்ல வேண்டும்.

விளம்பரத் தனிப்பயனாக்கம்

விளம்பரத் தனிப்பயனாக்கம் இயக்கப்பட்டால், உங்கள் விளம்பரங்கள் உங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்க, உங்கள் தகவலை Google பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, மலையேறும் பைக் விற்கும் இணையதளம், Google இன் விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தக்கூடும். அந்தத் தளத்தைப் பார்வையிட்ட பிறகு, மலையேறும் பைக்கிற்கான விளம்பரத்தை, Google விளம்பரங்களைக் காட்டக்கூடிய வேறொரு தளத்தில் பார்க்கலாம்.

விளம்பரத் தனிப்பயனாக்கம் முடக்கப்பட்டால், விளம்பரச் சுயவிவரத்தை உருவாக்குவதற்கோ அல்லது Google உங்களுக்குக் காட்டும் விளம்பரங்களைத் தனிப்பயனாக்குவதற்கோ, உங்கள் தகவலை Google சேகரிக்காது அல்லது பயன்படுத்தாது. இருப்பினும் நீங்கள் விளம்பரத்தைப் பார்ப்பீர்கள், அனால் அவை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்காமல் போகலாம். நீங்கள் பார்க்கும் இணையதளங்கள் அல்லது பயன்பாடுகளின் தலைப்பு, உங்கள் தற்போதைய தேடல் வார்த்தைகள் அல்லது உங்கள் பொதுவான இருப்பிடத்தின் அடிப்படையிலேயே விளம்பரங்கள் இருக்கக்கூடும், ஆனால், உங்கள் ஆர்வங்கள், தேடல் வரலாறு அல்லது உலாவி வரலாற்றின் அடிப்படையில் இருக்காது. உங்கள் தகவலானது, விளம்பரத்தின் செயல்திறனை அளவிடுவது மற்றும் மோசடி மற்றும் முறைகேட்டிலிருந்து பாதுகாப்பது போன்ற, மேலே குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.

Google சேவைகளைப் பயன்படுத்தும் இணையதளம் அல்லது பயன்பாட்டுடன் நீங்கள் ஊடாடும் போது, Google உட்பட விளம்பர வழங்குநர்களிடமிருந்து தனிப்பயனாக்கிய விளம்பரங்களைப் பார்க்க வேண்டுமா என்பதைத் தேர்வு செய்யும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு, உங்கள் விளம்பரத் தனிப்பயனாக்க அமைப்பு முடக்கப்பட்டிருந்தாலோ அல்லது தனிப்பயனாக்கிய விளம்பரங்களைப் பெறுவதற்கு உங்கள் கணக்கிற்குத் தகுதி இல்லை என்றாலோ, நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை Google தனிப்பயனாக்காது.

உங்கள் விளம்பர அமைப்புகளுக்குச் சென்று உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட எந்தத் தகவலைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பார்த்து, கட்டுப்படுத்தலாம்.

இந்தத் தளங்கள் மற்றும் பயன்பாடுகளில் Google சேகரித்த தகவலை நீங்கள் பயன்படுத்தும் முறை

Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள் மற்றும் பயன்பாடுகளைப் பார்வையிடும்போதோ அல்லது தொடர்புகொள்ளும்போதோ, உங்கள் சாதனம் பகிரும் தகவலைப் பயன்படுத்தும் வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • Google சேவைகள் (Google தேடல் அல்லது YouTube போன்றவை) அல்லது Google விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தும் Google அல்லாத இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, விளம்பர அமைப்புகள் உதவுகின்றன. நீங்கள் விளம்பரங்கள் எவ்வாறு தனிப்பயனாக்கப்படுகின்றன என்று அறியலாம், விளம்பரத் தனிப்பயனாக்கத்திலிருந்து விலகலாம் மற்றும் குறிப்பிட்ட விளம்பரதாரர்களைத் தடுக்கலாம்.
  • உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால், கணக்கு அமைப்புகளின் அடிப்படையில், நீங்கள் பார்வையிட்ட தளங்கள் மற்றும் பயன்பாடுகளில் இருந்து சேகரித்த தகவல் உட்பட, Google சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, உருவாகும் தரவை மதிப்பாய்வு செய்யவும் கட்டுப்படுத்தவும் எனது செயல்பாடு உங்களை அனுமதிக்கிறது. தேதி மற்றும் தலைப்பின் அடிப்படையில் நீங்கள் தேடலாம், மேலும் உங்கள் செயல்பாட்டின் பகுதியை அல்லது முழுமையாக நீக்கலாம்.
  • தங்களது தளங்கள் அல்லது பயன்பாடுகளில் பார்வையாளர்கள் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, பல இணையதளங்களும் பயன்பாடுகளும் Google Analyticsஐப் பயன்படுத்துகின்றன. உங்கள் உலாவியில் Analytics பயன்படுத்தப்பட வேண்டாம் என்றால், Google Analytics உலாவி செருகுநிரலை நிறுவலாம். Google Analytics மற்றும் தனியுரிமை குறித்து மேலும் அறிக.
  • Chrome இன் மறைநிலைப் பயன்முறையானது இணையத்தில் இணையப் பக்கங்களையும், கோப்புகளையும் உங்கள் உலாவி அல்லது கணக்கு வரலாற்றில் பதிவுசெய்யாமல் உலாவ அனுமதிக்கிறது (உள்நுழைவதை நீங்கள் தேர்வுசெய்யாத வரை). உங்களுடைய மறைநிலைப் பயன்முறைச் சாளரங்கள் மற்றும் தாவல்கள் எல்லாவற்றையும் நீங்கள் மூடிய பிறகு குக்கீகள் நீக்கப்படுகின்றன, மேலும் உங்கள் புத்தகக்குறிகளும் அமைப்புகளும் நீக்கும் வரை சேமிக்கப்படும். குக்கீகள் குறித்து மேலும் அறிக. Chrome மறைநிலைப் பயன்முறை அல்லது பிற மறைநிலை உலாவல் பயன்முறைகளைப் பயன்படுத்துவது, Google சேவைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களுக்குச் செல்லும்போது தரவுச் சேகரிப்பைத் தடுக்காது. மேலும் இந்த உலாவிகளைப் பயன்படுத்தி இணையதளங்களுக்குச் செல்லும்போது Google தொடர்ந்து தரவைச் சேகரிக்கலாம்.
  • Chrome உள்ளிட்ட பல உலாவிகள், மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தடுக்க உங்களை அனுமதிக்கின்றன. உங்கள் உலாவியில் உள்ள எந்தக் குக்கீகளையும் நீங்கள் அழிக்கலாம். Chrome இல் குக்கீகளை நிர்வகிப்பது பற்றி மேலும் அறிக.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு