வடிவமைப்பு அறிதலை Google எப்படி பயன்படுத்துகிறது

படங்களை உணர்வதற்கு வடிவமைப்பு அறிதலை Google எப்படி பயன்படுத்துகிறது

படங்களையும் வீடியோக்களையும் நாம் பார்ப்பதுபோல கணினிகள் பார்ப்பதில்லை. படத்தை நீங்கள் பார்க்கும்போது, உங்களின் சிறந்த நண்பர் அவரது வீட்டிற்கு முன் நிற்பதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் கணினியானது அதே படத்தை, ஒரு தரவுத் தொகுப்பாகக் காண்கிறது, அதாவது அது படத்தை வண்ண மதிப்புகள் பற்றிய வடிவங்களாகவும், தகவலாகவும் கருதுகிறது. படத்தை நீங்கள் பார்க்கும்போது வெளிக்காட்டும் உணர்ச்சியைப்போல கணினி எதையும் காண்பிக்காது என்றாலும், வண்ணம் மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட வடிவமைப்புகளை அறிவதற்கு கணினி பயிற்றுவிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பொதுவான வடிவமைப்புகளை அறிந்து, கடற்கரை போன்ற இயற்கை நிலக்காட்சி அல்லது கார் போன்ற பொருளின் டிஜிட்டல் படத்தை உருவாக்க, கணினி பயிற்றுவிக்கப்படலாம். இந்தத் தொழில்நுட்பமானது உங்கள் படங்களை ஒழுங்கமைக்க Google புகைப்படங்களுக்கு உதவுகிறது. அத்துடன், எந்தவொரு படத்தையும் எளிதாகத் தேடி, கண்டறிய பயனர்களுக்கு உதவுகிறது.

வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பொதுவான வடிவமைப்புகளை அறிந்து, முகத்தின் டிஜிட்டல் படத்தை உருவாக்கவும் கணினி பயிற்றுவிக்கப்படலாம். இந்தச் செயல்முறை முகமறிதல் என அழைக்கப்படுகிறது, மேலும் இது வீதிக்காட்சி போன்ற சேவைகளில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க Googleக்கு உதவும் தொழில்நுட்பமாகும். அதாவது வீதிக் காட்சியில் உலாவும் போது வீதியில் நிற்கக்கூடியவர்களைக் கணினிகள் கண்டறிந்து, அவர்களின் முகங்களை மங்கலாக மாற்றும்.

இன்னும் சற்று மேம்பட்ட தொழில்நுட்பத்தை நீங்கள் பெற்றால், முகமறிதலைக் கொண்ட அதே மாதிரியான கண்டறிதல் தொழில்நுட்பமானது, கண்டறிந்த முகத்தின் சிறப்பியல்புகளைப் புரிந்துகொள்ளவும் கணினிக்கு உதவலாம். எடுத்துக்காட்டாக, முகத்தில் புன்னகை உள்ளதை அல்லது கண்கள் மூடியிருப்பதைக் குறிப்பிடும் சில வடிவமைப்புகள் இருக்கக்கூடும். திரைப்படங்கள் மற்றும் உங்கள் படங்கள் & வீடியோக்கள் மூலமாக உருவாக்கப்பட்ட பிற விளைவுகளைப் பற்றிய பரிந்துரைகளை Google புகைப்படங்கள் வழங்குவது போன்ற அம்சங்களுக்கு உதவ, இதுபோன்ற தகவல் பயன்படுத்தப்படலாம்.

இதைப்போன்ற தொழில்நுட்பமானது, Google புகைப்படங்களில் உள்ள முகத்தின்படி குழுவாக்குதல் அம்சத்தையும் (சில நாடுகளில் கிடைக்கும்) வழங்கும். இது ஒரே மாதிரியான முகங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குழுவாக்க உதவுகிறது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் படங்களை எளிதாகத் தேடலாம், நிர்வகிக்கலாம். Google புகைப்படங்களின் உதவி மையத்தில் முகத்தின்படி குழுவாக்குதல் பற்றி படிக்கவும்.

குரல் தேடல் எப்படி வேலைசெய்கிறது

குரல் தேடலானது சாதனத்தில் உள்ள Google தேடல் கிளையன்ட் பயன்பாட்டில் வினவலைத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக குரல் மூலம் வினவலை வழங்க உங்களை அனுமதிக்கிறது. பேசிய சொற்களை உரையாக எழுத, பேட்டர்ன் ரெகக்னிஷனை இது பயன்படுத்துகிறது. நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை அறிவதற்கு ஒலிப்புகளை Google சேவையகங்களுக்கு அனுப்புவோம்.

குரல் தேடலில் குரல் மூலம் கேட்கப்படும் ஒவ்வொரு வினவலுக்கும், மொழி, நாடு மற்றும் கூறப்பட்டதைப் பற்றிய எங்கள் அமைப்பின் யூகம் ஆகியவற்றைச் சேமிப்போம். நீங்கள் ஒப்புதல் அளித்திருந்தால், சரியான தேடல் வினவலை இன்னும் சரியாக அறிந்துகொள்ள கணினியைப் பயிற்றுவிப்பது உட்பட எங்கள் சேவைகளை மேம்படுத்த, ஒலிப்புகள் போன்ற தரவை நாங்கள் வைத்திருப்போம். குரல் தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தலாம் என நீங்கள் குறிப்பிடும் வரையில் Googleக்கு எந்த ஒலிப்புகளையும் நாங்கள் அனுப்பமாட்டோம் (எடுத்துக்காட்டாக, விரைவான தேடல் பட்டி அல்லது விர்ச்சுவல் விசைப்பலகையில் உள்ள மைக்ரோஃபோன் ஐகானை அழுத்துவது அல்லது விரைவான தேடல் பட்டியானது குரல் தேடல் செயல்பாடு கிடைக்கிறது எனக் குறிப்பிடும் போது "Google" எனக் கூறுவது).

Google ஆப்ஸ்
முதன்மை மெனு