Google Voice எப்படி வேலைசெய்கிறது

உங்கள் அழைப்பு வரலாறு (அழைப்பாளரின் தொலைபேசி எண், நீங்கள் அழைத்தவரின் தொலைபேசி எண், தேதி, நேரம் மற்றும் அழைப்பின் கால அளவு ஆகியவை அடங்கும்), குரல் அஞ்சல் வாழ்த்து(கள்), குரல் அஞ்சல் செய்திகள், குறுச்செய்திச் சேவை (SMS) செய்திகள், பதிவுசெய்யப்பட்ட உரையாடல்கள், மேலும் உங்களுக்கு வழங்கப்படும் சேவையைப் பொறுத்து உங்கள் கணக்குத் தொடர்பான பிற தரவு ஆகியவற்றை Google Voice சேமிக்கிறது, செயலாக்குகிறது, மேலும் நிர்வகிக்கிறது.

உங்கள் அழைப்பு வரலாறு, குரலஞ்சல் வாழ்த்து(கள்), குரலஞ்சல் செய்திகள் (ஆடியோ மற்றும்/அல்லது ட்ரான்ஸ்கிரிப்ஷன்ஸ் ஆகிய இரண்டும்), குறுஞ்செய்திச் சேவை (SMS) செய்திகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உரையாடல்கள் ஆகியவற்றை உங்கள் Google Voice கணக்கின் மூலம் நீக்கலாம். எனினும், பில் செலுத்தத்தக்க அழைப்புகளுக்கான உங்கள் அழைப்பு வரலாறு, தொடர்ந்து உங்கள் கணக்கில் தோன்றக்கூடும். பில்லிங் மற்றும் பிற வணிக நோக்கங்களுக்காக, செயலிலுள்ள எங்கள் சேவையகங்களில் சில தகவல் தொடர்ந்து பாதுகாப்பாக வைக்கப்படும், மீதமுள்ள நகல்கள் எங்கள் மாற்று அமைப்புகளில் தொடர்ந்து இருக்கும். எங்கள் அறிக்கையிடல் மற்றும் தணிக்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவல் இல்லாத அழைப்புப் பதிவுத் தகவலின் அநாமதேய நகல்கள் எங்கள் அமைப்புகளில் தொடர்ந்து பாதுகாப்பாக வைக்கப்படும்.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு