சேவைகள் & சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளின் பட்டியல்

Googleளின் சேவை விதிமுறைகளையும் சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளையும் பயன்படுத்தும் சேவைகள்

Googleளின் சேவை விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள சேவைகளுக்குப் பொருந்தும். ஒவ்வொரு சேவைக்கும் அருகில் அந்தக் குறிப்பிட்ட சேவைக்குப் பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகளும் கொள்கைகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது இந்தச் சேவை விதிமுறைகள், கூடுதல் விதிமுறைகள், கொள்கைகள் ஆகியவை நமக்கு இடையேயான உறவையும் பரஸ்பர எதிர்பார்ப்புகளையும் வரையறுக்கின்றன.

இந்தப் பட்டியலில் Googleளின் பொதுவான சேவை விதிமுறைகளின் கீழ்வரும் சேவைகள் மட்டுமே உள்ளன. YouTube போன்ற பிரபலமான சில சேவைகள் அவற்றுக்கே உரிய தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதால் அவற்றுக்கே உரிய சொந்த விதிமுறைகள் உள்ளன. அதைப் போன்றே எங்களின் பெரும்பாலான கட்டண அடிப்படையிலான நிறுவனத் தயாரிப்புகளும் டெவெலப்பர் API தயாரிப்புகளும் அவற்றுக்கே உரிய சொந்த விதிமுறைகளைக் கொண்டுள்ளன.

நாங்கள் அடிக்கடி புதிய சேவைகளைத் தொடங்குவதுடன் சில நேரங்களில் எங்கள் விதிமுறைகளையும் கொள்கைகளையும் புதுப்பிப்போம். இந்தப் பக்கத்தில் சமீபத்திய புதுப்பிப்புகளைச் சேர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், அடிக்கடி அவ்வாறு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

சேவைகள்
 
Google ஆப்ஸ்
முதன்மை மெனு