Google எப்படி எனது தனியுரிமையைப் பாதுகாத்து, எனது தகவலைப் பாதுகாப்பாக வைக்கிறது?

உங்களுக்கு பாதுகாப்பும், தனியுரிமையும் முக்கியமானவை என்பது எங்களுக்குத் தெரியும் – அவை எங்களுக்கும் முக்கியாமானவையாகும். வலிமையான பாதுகாப்பை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கிறோம் மேலும் உங்கள் தகவல் பத்திரமாக உள்ளது என்றும், அதைத் தேவைப்படும்போது அணுகலாம் என்றும் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறோம்.

உங்களுக்கு வலுவான பாதுகாப்பை உறுதிப்படுத்த, உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க மற்றும் Google ஐ உங்களுக்கு மிகவும் செயல்திறன்மிக்கதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து பணிபுரிகிறோம். பாதுகாப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டாலர்களைச் செலவிடுகிறோம், மேலும் உங்கள் தகவலைப் பாதுகாப்புடன் வைத்திருக்க, தரவுப் பாதுகாப்பில் உலகப் புகழ் பெற்ற நிபுணர்களைப் பணியமர்த்துகிறோம். பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருவிகளான Google டாஷ்போர்டு, 2-படி சரிபார்ப்பு, எனது விளம்பர மையத்தில் இருக்கும் பிரத்தியேக விளம்பர அமைப்புகள் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளோம். எனவே, நீங்கள் Google மூலம் பகிரும் தகவலை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

ஆன்லைனில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது உள்ளிட்ட, ஆன்லைன் பாதுகாப்பு பற்றி மேலும் அறிய, Google பாதுகாப்பு மையத்தைப் பார்க்கவும்.

உங்கள் தனிப்பட்ட தகவலை எப்படித் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்துள்ளோம் என்பதையும், எப்படி அதன் கட்டுப்பாட்டை உங்களிடம் அளிப்போம் என்பதையும் பற்றி மேலும் அறியவும்.

எனது கணக்கு ஏன் ஒரு நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது?

பின்வரும் இரண்டு விஷயங்களைத் தீர்மானிப்பதற்காக, சேவை விதிமுறைகளில் உங்கள் கணக்கு ஒரு நாட்டுடன் (அல்லது பிராந்தியத்துடன்) இணைக்கப்பட்டுள்ளது:

  1. சேவைகளை வழங்கி, உங்கள் தகவல்களைச் செயலாக்கம் செய்து, பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள Google இணை நிறுவனம். பொதுவாக, Google தனது நுகர்வோர் சேவைகளை இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்றின் மூலமாக வழங்குகிறது:
    1. Google Ireland Limited: நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (EU நாடுகள், ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டெய்ன் மற்றும் நார்வே) அல்லது ஸ்விட்சர்லாந்தில் இருந்தால்
    2. அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட Google LLC: உலகின் பிற பகுதிகளுக்கு
  2. நமக்கு இடையேயான உறவை நிர்வகிக்கும் விதிமுறைகளின் பதிப்பு (இது உள்ளூர் சட்டங்களுக்கேற்ப மாறுபடக்கூடும்)

நீங்கள் இணைக்கப்பட்டுள்ள நாட்டையோ சேவைகளை வழங்கும் இணை நிறுவனத்தையோ பொருட்படுத்தாமல் அடிப்படையில் Google சேவைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நாட்டைத் தீர்மானித்தல்

நீங்கள் ஒரு புதிய கணக்கை உருவாக்கும்போது எந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு Google கணக்கை உருவாக்கினீர்களோ அந்த நாட்டுடன் உங்கள் கணக்கை இணைக்கிறோம். கணக்கை உருவாக்கி ஓர் ஆண்டுக்கும் மேலாகியிருந்தால், வழக்கமாக எந்த நாட்டிலிருந்து Google சேவைகளை அணுகுவீர்களோ அதைப் பயன்படுத்துவோம். வழக்கமாக இது முந்தைய ஆண்டில் நீங்கள் அதிக நேரம் செலவிட்ட இடமாக இருக்கும்.

அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நாட்டைப் பாதிக்காது. நீங்கள் வேறொரு நாட்டிற்குக் குடிபெயர்ந்தால் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நாடு மாற்றப்படுவதற்கு சுமார் ஓர் ஆண்டு ஆகக்கூடும்.

உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள நாடு நீங்கள் வசிக்கும் நாட்டுடன் பொருந்தவில்லையெனில், நீங்கள் பணிபுரியும் நாடும் வசிக்கும் நாடும் வேறுவேறாக இருப்பதோ உங்கள் IP முகவரியை மறைப்பதற்காக விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை (VPN - Virtual Private Network) நிறுவியுள்ளதோ ஒரு பிராந்தியத்தின் எல்லைக்கு அருகில் வசிப்பதோ காரணமாக இருக்கலாம். இணைக்கப்பட்டுள்ள நாடு தவறானது எனக் கருதினால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Google தேடல் முடிவுகளிலிருந்து என்னைப் பற்றிய தகவலை எப்படி அகற்றுவது?

Google தேடல் முடிவுகள் என்பன இணையத்தில் பொதுவாகக் கிடைக்கும் உள்ளடக்கத்தின் பிரதிபலிப்புகளாகும். தேடல் இன்ஜின்களால் உள்ளடக்கத்தை இணையதளங்களிலிருந்து நேரடியாக அகற்ற முடியாது, எனவே Google இலிருந்து தேடல் முடிவுகளை அகற்றினாலும் இணையத்திலிருக்கும் உள்ளடக்கம் அகற்றப்படாது. இணையத்திலிருந்து எதையாவது அகற்ற விரும்பினால், அந்த உள்ளடக்கம் இருக்கும் தளத்தின் வலைநிர்வாகியைத் தொடர்புகொள்ள வேண்டும், பிறகு மாற்றத்தைச் செய்யுமாறு அவரிடம் கேட்க வேண்டும். உள்ளடக்கம் அகற்றப்பட்ட பிறகு அதனை Google குறித்தவுடன், Google தேடல் முடிவுகளில் தகவல் தோன்றாது. அவசர அகற்றல் கோரிக்கை இருந்தால், மேலும் தகவலுக்கு எங்கள் உதவி பக்கத்தையும் பார்வையிடலாம்.

Google தேடல் முடிவுகளில் கிளிக் செய்யும் போது, எனது தேடல் வினவல்கள் இணையதளங்களுக்கு அனுப்பப்படுமா?

வழக்கமாக அனுப்புவதில்லை. Google Searchசில் ஒரு தேடல் முடிவை நீங்கள் கிளிக் செய்யும்போது, குறிப்பிட்ட சில தகவல்களை இலக்கு இணையப் பக்கத்திற்கு உங்கள் வலை உலாவி அனுப்பும். தேடல் முடிவுகள் பக்கத்தின் இணைய முகவரி அல்லது URLலில் உங்கள் தேடல் வார்த்தைகள் காட்டப்படலாம், ஆனால் உங்கள் உலாவி அந்த URLலை ரெஃபரர் URLலாக இலக்குப் பக்கத்திற்கு அனுப்புவதைத் தடுப்பதை Google Search நோக்கமாகக் கொண்டுள்ளது. தேடல் வினவல்கள் குறித்த தரவை Google Trends, Google Search Console ஆகியவற்றின் மூலமாக நாங்கள் வழங்குகிறோம். ஆனால் அப்படிச் செய்யும்போது, பல்வேறு பயனர்களால் வழங்கப்படும் வினவல்களை மட்டுமே பகிரும் வகையில் அவற்றை ஒன்றாகத் தொகுக்கிறோம்.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு