இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய விளம்பரங்கள்"

எடுத்துக்காட்டுகள்

  • எடுத்துக்காட்டாக, தோட்டக்கலை குறித்த இணையதளங்களையும், வலைப்பதிவுகளையும் நீங்கள் அடிக்கடி பார்த்தால், இணையத்தில் உலாவும்போது, தோட்டக்கலை தொடர்பான விளம்பரங்களைப் பார்க்கலாம். நீங்கள் YouTube இல் சமையல் பற்றிய வீடியோக்களைப் பார்த்தால், அது தொடர்பான கூடுதல் விளம்பரங்களைப் பார்க்கலாம். மேலும் அறிக.
  • உங்கள் தோராயமான இருப்பிடத்தைத் தீர்மானிக்க உங்கள் நடப்பு IP-முகவரியைப் பயன்படுத்துவோம், அதனால், நீங்கள் "பீஸ்ஸா" என்று தேடினால் அருகில் உள்ள பீஸ்ஸா டெலிவரி சேவைக்கான விளம்பரங்களை வழங்குவோம் அல்லது நீங்கள் "சினிமா" என்று தேடினால், அருகில் உள்ள திரையரங்கின் காட்சி நேரங்களை வழங்குவோம். மேலும் அறிக.
  • உங்களுக்கு மேலும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவதற்கு, Gmail இல் உள்ள மின்னஞ்சல்கள் போன்ற எங்கள் சேவைகளில் உள்ள உள்ளடக்கத்தை, எங்கள் அமைப்பு தானாக ஸ்கேன் செய்யலாம். சமீபத்தில் புகைப்படக்கலை அல்லது கேமராக்கள் பற்றிய செய்திகளை நிறைய பெற்றால், நீங்கள் உள்ளூர் கேமரா கடையில் ஒப்பந்தம் குறித்து அறிவதில் ஆர்வமாக இருக்கலாம். மாறாக, இந்தச் செய்திகளை ஸ்பேம் எனப் புகாரளித்தால், அந்த ஒப்பந்தத்தைப் பற்றி அறிய விருப்பமில்லாமல் இருக்கலாம். நிறைய மின்னஞ்சல் சேவைகள் வழங்கும் ஸ்பேம் வடிகட்டுதல் மற்றும் எழுத்துப்பிழைச் சரிபார்ப்பு போன்ற அம்சங்களை, இந்த வகையான தானியங்கி செயலாக்க முறையிலேயே வழங்குகின்றன. Gmail இல் உள்ள விளம்பர இலக்கு முழுமையான தன்னியக்கச் செயல்பாடாகும், மேலும் உங்களிடம் விளம்பரங்களையோ, தொடர்புடைய தகவலையோ காண்பிப்பதற்கு உங்கள் மின்னஞ்சல் அல்லது Google கணக்குத் தகவலை எவரும் படிப்பதில்லை. Gmail இல் உள்ள விளம்பரங்கள் குறித்து இங்கு மேலும் அறிக.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு