விளம்பரப்படுத்தல்

Google மற்றும் நீங்கள் பயன்படுத்தும் பல இணையதளங்கள் மற்றும் சேவைகள் ஆகியவை இலவசமாக இயங்க விளம்பரப்படுத்தல் உதவுகிறது. விளம்பரங்கள் பாதுகாப்பானவையாகவும், அதிகளவு கவனத்தை ஈர்க்காதபடியும், முடிந்தளவு அதிகம் தொடர்புடையாக இருப்பதையும் உறுதிப்படுத்த கடுமையாகப் பணியாற்றுகிறோம். எடுத்துக்காட்டாக, Google இல் பாப் அப் விளம்பரங்களைப் பார்க்க மாட்டீர்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீப்பொருள் கொண்ட விளம்பரங்கள், போலியான பொருட்களுக்கான விளம்பரங்கள் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலைத் தவறாக பயன்படுத்த முயலும் விளம்பரங்கள் உட்பட, எங்கள் கொள்கைகளை மீறும் ஆயிரக்கணக்கான வெளியீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் கணக்குகளை நிறுத்துகிறோம்.

ஆன்லைனில் பயனர்களின் தனியுரிமையை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்கும் நோக்கத்தில், டிஜிட்டல் விளம்பரங்களை வழங்குவதையும் அளவிடுவதையும் மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை Chromeமின் தனியுரிமை சாண்ட்பாக்ஸ் முன்னெடுப்புத் திட்டத்தின் மூலம் Google பரிசோதித்து வருகிறது. Chromeமின் தனியுரிமை சாண்ட்பாக்ஸ் தொடக்கச் சோதனைகளில் பங்கேற்கும் பயனர்கள் அவர்களது உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள அல்லது உலாவியுடன் பகிரப்பட்டுள்ள தலைப்புகள்/FLEDGE தரவின் அடிப்படையில் Google வழங்கும் தொடர்புடைய விளம்பரங்களைப் பார்க்கக்கூடும். மேலும், அவர்களது உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள அல்லது உலாவியுடன் பகிரப்பட்டுள்ள Attribution Reporting தரவைப் பயன்படுத்தியும் விளம்பரச் செயல்திறனை Google அளவிடக்கூடும். தனியுரிமை சாண்ட்பாக்ஸ் குறித்த கூடுதல் தகவல்கள்.

விளம்பரப்படுத்தலில் குக்கீகளை Google எப்படிப் பயன்படுத்துகிறது

குக்கீகள் விளம்பரப்படுத்தலை மேலும் சிறப்பானதாக்க உதவுகின்றன. குக்கீகள் இல்லாமல், தனது பார்வையாளர்களை அடைவது அல்லது எவ்வளவு விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன மற்றும் எவ்வளவு கிளிக்குகள் அவை பெற்றன என்பது குறித்து அறிவது விளம்பரதாரருக்குக் கடினமாக இருக்கும்.

செய்திகளின் தளங்கள், வலைப்பதிவுகள் போன்ற பல இணையதளங்கள், தனது பார்வையாளர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்க Google உடன் கூட்டாளராகிறது. எங்கள் கூட்டாளர்களுடன் பணியாற்றுவதால், நீங்கள் ஒரே விளம்பரத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதை நிறுத்த, கிளிக் மோசடிகளைக் கண்டறிந்து நிறுத்த, மேலும் தொடர்புடைய விளம்பரங்களை (நீங்கள் பார்வையிட்ட இணையதளங்களின் அடிப்படையிலான விளம்பரங்களை) காண்பிக்க மற்றும் இது போன்ற பல நோக்கங்களுக்காக நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்தலாம்.

நாங்கள் வழங்கும் விளம்பரங்களின் பதிவை எங்கள் பதிவுகளில் சேமிக்கிறோம். இந்தச் சேவையகப் பதிவுகளில் உங்கள் இணையக் கோரிக்கை, IP முகவரி, உலாவியின் வகை, உலாவியின் மொழி, உங்கள் கோரிக்கையின் தேதி மற்றும் நேரம், மேலும் உங்கள் உலாவியைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குக்கீகள் ஆகியவை அடங்கும். இந்தத் தரவைப் பல காரணங்களுக்காகச் சேமிக்கிறோம், அவற்றில் மிகவும் முக்கியமான காரணம் எங்கள் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் எங்கள் அமைப்புகளின் பாதுகாப்பைப் பராமரிப்பதுமே ஆகும். IP முகவரியின் சில பகுதிகளையும் (9 மாதங்களுக்குப் பிறகு), குக்கீ தகவலையும் (18 மாதங்களுக்குப் பிறகு) அகற்றுவதன் மூலம், இந்தப் பதிவு தரவை அநாமதேயமாக்குவோம்.

எங்கள் விளம்பரப்படுத்தல் குக்கீகள்

எங்கள் கூட்டாளர்களின் விளம்பரப்படுத்தலையும் இணையதளங்களையும் நிர்வகிப்பதில் அவர்களுக்கு உதவ, AdSense, AdWords, Google Analytics மற்றும் பல்வேறு DoubleClick-பிராண்டட் சேவைகள் உட்பட பல தயாரிப்புகளை வழங்குகிறோம். Google சேவைகளிலோ பிற தளங்கள் மற்றும் பயன்பாடுகளிலோ இந்தத் தயாரிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தும் பக்கத்திற்குச் செல்லும் போது அல்லது விளம்பரத்தைப் பார்க்கும் போது, உங்கள் உலாவிக்குப் பல்வேறு குக்கீகள் அனுப்பப்படக்கூடும்.

google.com, doubleclick.net, googlesyndication.com அல்லது googleadservices.com அல்லது எங்கள் கூட்டாளர்கள் தளங்களின் டொமைன் உட்பட சில வெவ்வேறு டொமைன்களிலிருந்து இவை அமைக்கப்படலாம். எங்களின் சில விளம்பரத் தயாரிப்புகள், எங்கள் சேவைகளுடன் சேர்த்து பிற சேவைகளைப் (விளம்பர அளவீடு, அறிக்கையிடல் சேவை போன்றவை) பயன்படுத்த கூட்டாளர்களை அனுமதிக்கும், மேலும் இந்தச் சேவைகள் தங்கள் சொந்தக் குக்கீகளை உங்கள் உலாவிக்கு அனுப்பலாம். இந்தக் குக்கீகள் அவற்றின் டொமைன்களிலிருந்து அமைக்கப்படும்.

எங்கள் கூட்டாளர்கள் மற்றும் Google பயன்படுத்தும் குக்கீகளின் வகைகள் மற்றும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவோம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்க்கவும்.

விளம்பர குக்கீகளை நீங்கள் எப்படி கட்டுப்படுத்தலாம்

நீங்கள் பார்க்கும் Google விளம்பரங்களை நிர்வகிக்க, விளம்பரத் தனிப்பயனாக்கத்திலிருந்து குழுவிலக, விளம்பர அமைப்புகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் விளம்பரத் தனிப்பயனாக்கத்திலிருந்து விலகினாலும், உங்கள் IP முகவரியிலிருந்து பெற்ற பொது இருப்பிடம், உலாவி வகை மற்றும் தேடல் சொற்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் விளம்பரங்கள் காண்பிக்கப்படலாம்.

US சார்ந்த aboutads.info choices பக்கம் அல்லது EU சார்ந்த Your Online Choices போன்று, பல நாடுகளில் உள்ள சுய ஒழுங்குமுறை திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட வாடிக்கையாளர் தேர்வுக் கருவிகள் வழியாக ஆன்லைன் விளம்பரப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பல நிறுவனங்களின் குக்கீகளையும் நீங்கள் நிர்வகிக்கலாம்.

இறுதியில், உங்கள் இணைய உலாவியில் குக்கீகளை நிர்வகிக்கலாம்.

விளம்பரப்படுத்தலில் பயன்படுத்தப்படும் பிற தொழில்நுட்பங்கள்

Google இன் விளம்பரப்படுத்தல் அமைப்புகளானது ஊடாடத்தக்க விளம்பர வடிவமைப்புகளின் காட்சி போன்ற செயல்பாடுகளுக்கு Flash மற்றும் HTML5 உள்பட பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, IP முகவரியை உங்கள் பொது இருப்பிடத்தைக் கண்டறிவற்கு நாங்கள் பயன்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் உள்ள முடுக்க அளவி போன்ற சென்சார்கள் அல்லது உங்கள் சாதன மாதிரி, உலாவி வகை போன்ற உங்கள கணினி அல்லது சாதனத்தைப் பற்றிய தகவல் அடிப்படையிலும் விளம்பரப்படுத்தலை நாங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இருப்பிடம்

பல்வேறு மூலங்களிலிருந்து உங்கள் இருப்பிடம் பற்றிய தகவலை Google இன் விளம்பரத் தயாரிப்புகள் பெறலாம் அல்லது கணிக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் பொது இருப்பிடத்தை அடையாளம் காண்பதற்கு, IP முகவரியைப் பயன்படுத்தலாம்; உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து துல்லியமான இருப்பிடத்தைப் பெறலாம்; உங்கள் தேடல் வினவல்களிலிருந்து இருப்பிடத்தைக் கணிக்கலாம்; நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் அல்லது பயன்பாடுகள், இருப்பிடம் பற்றிய தகவலை எங்களுக்கு அனுப்பலாம். புள்ளிவிவரத் தகவலைக் கணிக்க, நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை மேலும் தொடர்புடையதாக்க, விளம்பரச் செயல்திறனை அளவிட, மேலும் ஒருங்கிணைத்த புள்ளிவிவரங்களை விளம்பரதாரர்களுக்குத் தெரிவிக்க, எங்கள் விளம்பரத் தயாரிப்புகளில் உள்ள இருப்பிடத் தகவலை Google பயன்படுத்தும்.

மொபைல் பயன்பாடுகளுக்கான விளம்பர அடையாளங்காட்டிகள்

குக்கீ தொழில்நுட்பம் கிடைக்காத சேவைகளில் (எ.கா. மொபைல் பயன்பாடுகள்) விளம்பரங்களை வழங்க, குக்கீகளைப் போன்றே செயல்படக்கூடிய தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். மொபைல் பயன்பாடுகள் மற்றும் மொபைல் உலாவி முழுவதும் விளம்பரங்களை ஒருங்கிணைப்பதற்காக, மொபைல் சாதனத்தில் உள்ள விளம்பரக் குக்கீயுடன் மொபைல் பயன்பாடுகளில் விளம்பரப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் அடையாளங்காட்டியை சில சமயங்களில் Google இணைக்கும். எடுத்துக்காட்டாக, மொபைல் உலாவியில் இணையப் பக்கத்தைத் திறக்கும் விளம்பரத்தைப் பயன்பாட்டில் பார்க்கும் போது இவ்வாறு நிகழலாம். எங்கள் விளம்பரதாரர்களது விளம்பரங்களின் செயல்திறன் தொடர்பாக அவர்களுக்கு வழங்கும் அறிக்கைகளை மேம்படுத்தவும் இது எங்களுக்கு உதவும்.

உங்கள் மொபைல் சாதனப் பயன்பாடுகளில் தனிப்பயனாக்கிய விளம்பரங்களிலிருந்து குழுவிலக, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Android

  1. இந்த இடங்கள் ஒன்றில் Google அமைப்புகளைக் கண்டறியவும் (உங்கள் சாதனத்தைப் பொறுத்தது):
    1. தனிப் பயன்பாடான Google அமைப்புகள்
    2. முதன்மை அமைப்புகள் பயன்பாட்டில், கீழே சென்று Google என்பதைத் தட்டவும்
  2. விளம்பரங்கள் என்பதைத் தட்டவும்
  3. ஆர்வம் சார்ந்த விளம்பரங்களிலிருந்து குழுவிலகு என்பதை இயக்கவும்

iOS

iOS சாதனங்கள் Apple Advertising Identifierஐப் பயன்படுத்துகின்றன. இந்த அடையாளங்காட்டியின் உபயோகம் குறித்த உங்கள் விருப்பத்தேர்வுகளைப் பற்றி மேலும் அறிய, சாதனத்தில் அமைப்புகள் பயன்பாட்டிற்குச் செல்லவும்.

நான் பார்க்கும், Google வழங்கும் விளம்பரங்களை எது தீர்மானிக்கிறது?

நீங்கள் பார்க்கும் விளம்பரம், பல முடிவுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன.

சில சமயங்களில், உங்கள் தற்போதைய அல்லது முந்தைய இருப்பிடத்தின் அடிப்படையில் விளம்பரம் காட்டப்படும். பொதுவாக, உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான சிறந்த அடையாளம் IP முகவரியாகும். இதன் மூலம், உங்கள் நாட்டில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தொடர்பான விளம்பரம் உங்கள் YouTube.com இன் முகப்புப் பக்கத்தில் காட்டப்படலாம் அல்லது ‘பீட்சா’க்கான தேடல் முடிவுகளில் உங்கள் ஊரிலுள்ள பீட்சா கடைகளின் விவரங்களைப் பெறலாம்.

சில நேரங்களில், நீங்கள் பார்க்கும் விளம்பரம், பக்கத்தின் சூழலைச் சார்ந்ததாக இருக்கும். தோட்டக்கலை உதவிக்குறிப்புகள் உள்ள பக்கத்தைப் பார்க்கிறீர்கள் எனில், தோட்டக்கலைக் கருவிகளுக்கான விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

சில சமயங்களில், பயன்பாட்டில் அல்லது Google சேவைகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு அடிப்படையில் இணையத்திலும் அல்லது இணையச் செயல்பாட்டின் அடிப்படையில் பயன்பாட்டிலும் விளம்பரத்தைப் பார்க்கக்கூடும் அல்லது மற்றொரு சாதனத்தில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டின் அடிப்படையிலும் விளம்பரத்தைப் பார்க்கக்கூடும்.

சில நேரங்களில், பக்கத்தில் நீங்கள் பார்க்கும் விளம்பரம் Google ஆல் வழங்கப்பட்டதாக இருக்கும், ஆனால் அது மற்றொரு நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்தித்தாள் இணையதளத்தில் பதிவுசெய்திருக்கலாம். நீங்கள் செய்தித்தாளிற்கு வழங்கிய தகவலில் இருந்து, உங்களுக்கு எந்த விளம்பரங்களைக் காண்பிக்கலாம் என்பது பற்றிய முடிவுகளை இது எடுக்கும், மேலும் அந்த விளம்பரங்களை வழங்க, Google இன் விளம்பரச் சேவைத் தயாரிப்புகளை இது பயன்படுத்தலாம்.

மின்னஞ்சல் முகவரி (நீங்கள் விளம்பரதாரர்களுக்கு வழங்கி, அவர்கள் அதை Google உடன் பகிர்ந்தது) போன்ற தகவலின் அடிப்படையில் தேடல், Gmail, YouTube உள்ளிட்ட Google தயாரிப்புகளிலும் சேவைகளிலும் விளம்பரங்களைப் பார்க்கலாம்.

நான் பார்வையிட்டுள்ள தயாரிப்புகளுக்காக Google வழங்கும் விளம்பரங்களை ஏன் பார்க்கிறேன்?

நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட தயாரிப்புகளுக்கான விளம்பரங்களைப் பார்க்கலாம். கோல்ஃப் மட்டைகளை விற்கும் இணையதளத்தை நீங்கள் பார்வையிடுவதாக வைத்துக்கொள்வோம், ஆனால் நீங்கள் முதன்முறை பார்க்கும் போதே அந்த மட்டைகளை வாங்கியிருக்க மாட்டீர்கள். இணையதளத்தின் உரிமையாளர், நீங்கள் மீண்டும் வந்து உங்கள் வாங்குதலை நிறைவு செய்ய உங்களை ஊக்கப்படுத்த விரும்பலாம். இணையதள ஆபரேட்டர்கள், தங்களது பக்கங்களைப் பார்வையிட்டவர்களுக்கு தங்கள் விளம்பரங்களைக் காட்டுவதை அனுமதிக்கும் சேவைகளை Google வழங்குகிறது.

இதைச் செயல்படுத்த, நீங்கள் கோல்ஃபிங் தளத்தைப் பார்வையிடும் போது, Google ஏற்கனவே உலாவியில் உள்ள குக்கீயைப் படிக்கும் அல்லது உலாவியில் குக்கீயை அமைக்கும் (உங்கள் உலாவி இதை அனுமதிப்பதாக எடுத்துக்கொள்ளும்).

கோல்ஃப் உடன் சிறிதும் தொடர்பில்லாத, Google உடன் செயல்படும் மற்றொரு இணையதளத்தை நீங்கள் பார்வையிடும்போது, கோல்ஃப் மட்டைகளுக்கான விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். உங்கள் உலாவி அதே குக்கீயை Google க்கு அனுப்புவதுதான் இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, அந்த கோல்ஃப் மட்டைகளை வாங்குவதற்காக உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய விளம்பரத்தைக் காண்பிக்கக் குக்கீகளை நாங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் Google இல் கோல்ஃப் மட்டைகளைத் தேடும் போது தனிப்பயனாக்கிய விளம்பரங்களைக் காட்ட, நீங்கள் பார்வையிட்ட கோல்ஃபிங் தளத்தையும் Google பயன்படுத்தலாம்.

இந்த வகை விளம்பரத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். எடுத்துக்காட்டாக, உடல்நலத் தகவல் அல்லது மத நம்பிக்கைகள் போன்ற உணர்வைப் பாதிக்கும் தகவல் அடிப்படையில் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்காதபடி விளம்பரதாரர்களைத் தடுத்துள்ளோம்.

Google விளம்பரங்களைப் பற்றி மேலும் அறிக.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு