குக்கீகளை Google எப்படிப் பயன்படுத்துகிறது

குக்கீ என்பது நீங்கள் பார்வையிடும் இணையதளத்தின் மூலம் உங்கள் உலாவிக்கு அனுப்பப்படும் சிறிய உரையாகும். உங்கள் வருகை குறித்த தகவல்களை இணையதளம் நினைவில் வைத்துக்கொள்ள இது உதவுகிறது, நீங்கள் தளத்தை மீண்டும் பார்வையிடுவதையும் தளம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதையும் எளிதாக்குகிறது.

எடுத்துக்காட்டாக, உங்கள் விருப்ப மொழியை நினைவில் வைத்துக்கொள்ள, உங்களுக்கு இன்னும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்க, ஒரு பக்கத்திற்கு எவ்வளவு பார்வையாளர்கள் வருகிறார்கள் என்பதைக் கணக்கிட, எங்கள் சேவைகளில் பதிவுசெய்வதற்கு உங்களுக்கு உதவ, உங்கள் தரவைப் பாதுகாக்க அல்லது உங்கள் விளம்பர அமைப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்.

Google பயன்படுத்தும் குக்கீகளின் வகைகளையும் குறிப்பிட்ட குக்கீகளின் பெயர்களையும் இந்தப் பக்கம் விவரிக்கிறது. Google மற்றும் எங்கள் கூட்டாளர்கள் விளம்பரப்படுத்தலுக்காகக் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதையும் இது விளக்குகிறது. குக்கீகள் மற்றும் பிற தகவல்களை நாங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை அறிய தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

Google பயன்படுத்தும் குக்கீ வகைகள்

Google இணையதளங்களையும் விளம்பரங்கள் தொடர்பான தயாரிப்புகளையும் இயக்குவதற்குப் பல வகைகளிலான குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். கீழே விவரிக்கப்பட்டுள்ளவற்றில் சில குக்கீகளோ அனைத்துமோ உங்கள் உலாவியில் சேமிக்கப்படக்கூடும். உங்கள் உலாவியில் குக்கீகளைப் பார்க்கலாம் நிர்வகிக்கலாம் (மொபைல் சாதனங்களுக்கான உலாவிகளில் இந்த வசதி கிடைக்காமல் போகலாம்). உதாரணமாக, நீங்கள் Google Chromeமை உங்கள் உலாவியாகப் பயன்படுத்தினால் chrome://settings/cookies என்பதற்குச் செல்லலாம்.

விருப்பத்தேர்வுகள்

தளம் செயல்படும் அல்லது தோற்றமளிக்கும் விதத்தை மாற்றும் தகவல்களைத் தளம் நினைவில் வைத்துக்கொள்வதற்கு இந்தக் குக்கீகள் அனுமதிக்கின்றன.

உதாரணமாக, நீங்கள் இருக்கும் பகுதியையும் உங்கள் விருப்ப மொழியையும் நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் ஒரு தளத்தால் உள்ளூர் வானிலை அறிக்கைகளை உங்கள் சொந்த மொழியிலேயே வழங்க முடியும். உரையின் அளவு, எழுத்துரு மற்றும் நீங்கள் பிரத்தியேகமாக்கும் இணையப் பக்கங்களின் மற்ற பகுதிகளை மாற்றுவதற்கும் இந்தக் குக்கீகள் உதவும்.

Google சேவைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் தங்களது உலாவிகளில் ‘NID’ என்றழைக்கப்படும் விருப்பத்தேர்வுகள் குக்கீயை வைத்திருப்பார்கள். Google சேவையை நீங்கள் பார்வையிடும்போது பக்கத்துக்கான கோரிக்கையுடன் உலாவி இந்தக் குக்கீயை அனுப்புகிறது. உங்கள் விருப்ப மொழி, முடிவுகள் பக்கத்தில் எத்தனை தேடல் முடிவுகளை (எ.கா. 10 அல்லது 20) காண்பிக்க வேண்டும், Googleளின் பாதுகாப்பான தேடல் வடிப்பானை இயக்க விரும்புகிறீர்களா என்பது போன்ற உங்கள் விருப்பத்தேர்வுகளையும் பிற தகவல்களையும் Google நினைவில் வைத்திருந்து பயன்படுத்தும் வகையில் NID குக்கீயில் ஒரு பிரத்தியேக ஐடி இருக்கும்.

பாதுகாப்பு

இந்தக் குக்கீகள் பயனர்களை அங்கீகரிப்பதற்கு ஒரு தளத்திற்கு அனுமதி வழங்கும், உள்நுழைவிற்கான அனுமதிச் சான்றுகள் மோசடிச் செயல்களுக்காக உபயோகிக்கப்படுவதைத் தடுக்கும், அங்கீகரிக்கப்படாத தரப்பினரிடமிருந்து பயனரின் தரவைப் பாதுகாக்கும்.

உதாரணமாக, 'SID' மற்றும் 'HSID' என்றழைக்கப்படும் குக்கீகளில் பயனரின் Google கணக்கு ஐடியின் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட & குறியாக்கப்பட்ட பதிவுகளும் மிகச் சமீபத்திய உள்நுழைவு நேரமும் இருக்கும். இணையப் பக்கங்களில் நீங்கள் பூர்த்தி செய்யும் படிவத்தின் உள்ளடக்கத்தைத் திருடுவதற்கான முயற்சிகள் போன்ற பல வகையான தாக்குதல்களைத் தடுக்க இந்த இரண்டு குக்கீகளும் சேர்ந்து எங்களை அனுமதிக்கின்றன.

செயல்கள்

ஒரு தளம் சேவைகளை வழங்குவதற்கும் எதிர்பார்த்தபடி செயல்படுவதற்கும் இந்தக் குக்கீகள் உதவுகின்றன.

உதாரணமாக, பார்வையாளர்கள் இணையப் பக்கங்களில் செல்வதற்கும் தளத்தின் பாதுகாப்பான பகுதிகளை அணுகுவதற்கும் இந்தக் குக்கீகள் உதவுகின்றன. ஓர் உலாவியில் பல ஆவணங்களை Google Docs திறப்பதற்கு 'lbcs' என்றழைக்கப்படும் குக்கீயைப் பயன்படுத்துகிறோம்.

இந்தக் குக்கீயைத் தடுப்பதனால் Google Docsஸும் பிற Google சேவைகளும் சரியாக இயங்காது.

விளம்பரப்படுத்தல்

விளம்பரங்களைப் பயனர்கள் அதிகமாகப் பார்க்கும்படி செய்வதற்கும், வெளியீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு மிகவும் மதிப்புள்ளதாக்கவும் இந்தக் குக்கீகள் உதவுகின்றன.

எடுத்துக்காட்டாக, பயனருக்கு ஏற்ற விளம்பரங்களைத் தேர்ந்தெடுக்க, பிரச்சாரச் செயல்திறனின்போது அறிக்கையிடுதலை மேம்படுத்த, ஏற்கெனவே பயனர் பார்த்த விளம்பரங்களைக் காண்பிப்பதைத் தவிர்க்க இவை பயன்படுத்தப்படலாம்.

Google Search போன்ற Google தயாரிப்புகளில் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்கு உதவியாக 'NID' மற்றும் 'SID' போன்ற குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, மிகச் சமீபத்திய தேடல்கள், விளம்பரதாரரின் விளம்பரங்கள் அல்லது தேடல் முடிவுகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகள், விளம்பரதாரரின் இணையதளத்திற்கு நீங்கள் மேற்கொண்ட வருகைகள் ஆகியவற்றை நினைவில் வைத்திருக்க இது போன்ற குக்கீகளைப் பயன்படுத்துவோம். பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை உங்களுக்கு Googleளில் காட்ட இது எங்களுக்கு உதவுகிறது.

இணையம் முழுவதும் நாங்கள் வழங்கும் விளம்பரங்களுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குக்கீகளையும் பயன்படுத்துகிறோம். Google அல்லாத தளங்களில் உள்ள எங்களின் பிரதான விளம்பரக் குக்கீகளில் ஒன்று 'IDE' என அழைக்கப்படுகிறது, இது உலாவிகளில் doubleclick.net எனும் டொமைனின் கீழ் சேமிக்கப்படுகிறது. மற்றொன்று google.com தளத்தில் சேமிக்கப்படுகிறது, அது 'ANID' என அழைக்கப்படுகிறது. 'DSID', 'FLC', 'AID', 'TAID', 'exchange_uid' போன்ற பெயர்களில் உள்ள பிற குக்கீகளையும் பயன்படுத்துகிறோம். YouTube போன்ற பிற Google தயாரிப்புகளும் மிகவும் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட இந்தக் குக்கீகளைப் பயன்படுத்தக்கூடும்.

சில சமயம் நீங்கள் பார்வையிடும் தளத்தின் டொமைனில் விளம்பரக் குக்கீகள் அமைக்கப்படலாம். இணையம் முழுவதும் நாங்கள் வழங்கும் விளம்பரங்களுக்கு, நீங்கள் பார்வையிடும் தளத்தின் டொமைனில் ‘__gads’ அல்லது ‘__gac’ போன்ற குக்கீகள் அமைக்கப்படலாம். Googleளின் சொந்த டொமைன்களில் அமைக்கப்பட்டுள்ள குக்கீகளைப் போன்றல்லாமல் இந்தக் குக்கீகள் அமைக்கப்பட்ட தளம் அல்லாத வேறு தளத்தில் நீங்கள் இருக்கும்போது இவற்றை Googleளால் படிக்க இயலாது. அந்த டொமைனில் உள்ள விளம்பரங்களில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை அளவிடுதல், அதே விளம்பரங்கள் அதிக முறை காட்டப்படுவதைத் தடுத்தல் போன்றவற்றை இவை செய்கின்றன.

Google மாற்றல் குக்கீகளையும் பயன்படுத்துகிறது, உதாரணமாக ‘__gcl’ என்ற குக்கீகள் வாடிக்கையாளர்கள் விளம்பரங்களைக் கிளிக் செய்து எத்தனைமுறை தங்களின் தளத்தில் பர்ச்சேஸ் போன்ற செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை விளம்பரதாரர்கள் தீர்மானிக்க உதவும். விளம்பரத்தைக் கிளிக் செய்து பின்னர் விளம்பரதாரரின் தளத்தைப் பார்வையிட்டீர்கள் என்பதை Google நிறுவனமும் விளம்பரதாரரும் அறிந்துகொள்ள இந்தக் குக்கீகள் உதவுகின்றன. பிரத்தியேக விளம்பரங்களை வழங்குவதற்காக இந்தக் குக்கீகளை Google பயன்படுத்துவதில்லை, மேலும் இவை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். மாற்றல் நிகழ்வுகளை அளவிடுவதற்காகவும் எங்களிடமுள்ள வேறு சில குக்கீகள் பயன்படுத்தப்படக்கூடும். உதாரணமாக, Google Marketing Platform & Google Analytics குக்கீகளும் இதற்காகப் பயன்படுத்தப்படக்கூடும்.

'AID', 'DSID', 'TAID' ஆகிய குக்கீகளையும் பயன்படுத்துகிறோம், முன்பு வேறு சாதனத்தில் உங்கள் Google கணக்கின் மூலம் உள்நுழைந்துள்ளீர்கள் எனில் பல்வேறு சாதனங்களிலான உங்கள் செயல்பாடுகளை இணைக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு சாதனங்களில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை ஒருங்கிணைக்கவும் மாற்றல் நிகழ்வுகளை அளவிடவும் இதைச் செய்கிறோம். இந்தக் குக்கீகள் google.com/ads, google.com/ads/measurement அல்லது googleadservices.com டொமைன்களில் அமைக்கப்படக்கூடும்.

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் உங்கள் சாதனங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டாமெனில் விளம்பர அமைப்புகளைப் பயன்படுத்தி விளம்பரப் பிரத்தியேகமாக்கல் வேண்டாமெனத் தேர்வுசெய்யலாம்.

அமர்வு நிலை

பயனர் ஒரு தளத்தை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து, சேவையையும் உலாவல் அனுபவத்தையும் மேம்படுத்துவதற்கு இந்தக் குக்கீகள் தளத்திற்கு உதவுகின்றன.

உதாரணமாக, பயனர்கள் மிக அதிகமாகப் பார்க்கும் பக்கங்களையும் குறிப்பிட்ட பக்கங்களில் இருந்து பயனர்கள் பிழைச் செய்திகளைப் பெறுகிறார்களா என்பதையும் கண்காணிக்க இந்தக் குக்கீகள் பயன்படுத்தப்படலாம். ‘கிளிக்கிற்கான பணம்’ மற்றும் இணை விளம்பரப்படுத்தலின் செயல்திறனை பெயர் அடையாளமின்றி அளவிடுவதற்கும் இந்தக் குக்கீகள் பயன்படுத்தப்படக்கூடும். உதாரணமாக, ‘recently_watched_video_id_list’ என்ற குக்கீயைப் பயன்படுத்துகிறோம், இதனால் குறிப்பிட்ட உலாவியில் சமீபத்தில் பார்க்கப்பட்ட வீடியோக்களை YouTube பதிவுசெய்ய முடியும்.

பகுப்பாய்வுகள்

இந்தக் குக்கீகள், பார்வையாளர்கள் ஒரு தளத்தில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அந்தத் தளத்திற்கு உதவுகின்றன.

உதாரணமாக, Google Analytics என்பது இணையதள மற்றும் ஆப்ஸ் உரிமையாளர்கள் தங்கள் வருகையாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளுடன் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் Googleளின் பகுப்பாய்வுக் கருவியாகும். Googleளிடம் வருகையாளர்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாமல் தகவல்களைச் சேகரித்து தள உபயோகப் புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கும் குக்கீகளின் தொகுப்பை Google Analytics பயன்படுத்தக்கூடும். Google Analytics பயன்படுத்தும் முதன்மையான குக்கீ ‘_ga’ குக்கீ ஆகும். இந்த நோக்கத்திற்காக Google தயாரிப்புகளில் Analytics குக்கீகளையும் Google பயன்படுத்தக்கூடும்.

உங்கள் உலாவியில் குக்கீகளை நிர்வகித்தல்

நீங்கள் உலாவும்போது குக்கீகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த பெரும்பாலான உலாவிகள் உங்களை அனுமதிக்கும்.

சில உலாவிகள் தானாகவே குக்கீகளை வரம்பிடும் அல்லது நீக்கும். மேலும் சில உலாவிகளில் ஒவ்வொரு தளத்தின் அடிப்படையில் குக்கீகளை நிர்வகிப்பதற்கான விதிகளை அமைக்கலாம், இது நீங்கள் நம்பும் தளங்களின் குக்கீகளை மட்டும் அனுமதிக்க உங்களுக்கு அனுமதி வழங்குகிறது.

Google Chromeமில், 'உலாவிய தரவை அழி' எனும் விருப்பம் அமைப்புகளில் காணப்படும். குக்கீகளையும் பிற உலாவிய தரவையும் அழிக்க இந்த விருப்பத்தைப் பயன்படுத்தலாம். Chromeமில் குக்கீகளை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளைக் காண்க.

மறைநிலைப் பயன்முறையின் மூலம் மறைநிலை உலாவலையும் Google Chrome ஆதரிக்கிறது. நீங்கள் பார்க்கும் தளங்களோ பதிவிறக்கங்களோ உலாவல் மற்றும் பதிவிறக்க வரலாறுகளில் சேமிக்கப்படக்கூடாது என விரும்பினால் மறைநிலைப் பயன்முறையில் உலாவலாம். மறைநிலை உலாவிச் சாளரங்கள் அனைத்தையும் நீங்கள் மூடியதும் உங்கள் உலாவல் வரலாறு, குக்கீகள் மற்றும் பிற தரவை Chrome சேமிக்காது.

குக்கீகளில் சேமிக்கப்பட்ட தகவல்களை நீக்குவதால் தளத்தின் செயல்பாடு குறையக்கூடும், எனினும் தளத்தின் செயல்பாட்டைத் தடுக்காது.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு