நாம் சேகரிக்கும் தரவை Google தக்கவைத்துக்கொள்ளும் முறை

நீங்கள் Google சேவைகளைப் பயன்படுத்தும் போது, தரவைச் சேமிக்கிறோம். நாங்கள் என்ன சேகரிக்கிறோம், ஏன் அதைச் சேகரிக்கிறோம் மற்றும் உங்கள் தகவலை நீங்கள் எப்படி நிர்வக்கிக்கலாம் போன்றவை எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளன. ஏன் வெவ்வேறு காலகட்டங்களுக்கான பல்வேறு வகையான தரவுகளை வைத்திருக்கிறோம் என்பதை, இந்தத் தக்கவைத்தல் கொள்கையானது விவரிக்கிறது.

சில தரவை நீங்கள் விரும்பும் போது நீக்கலாம், சில தரவு தானாகவே நீக்கப்படும், சில தரவைத் தேவைப்படும் போது நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்வோம். நீங்கள் தரவை நீக்கும் போது, உங்கள் தரவு பாதுகாப்பாகவும் முழுமையாகவும் எங்கள் சேவையகங்களில் இருந்து அகற்றப்படுவதை அல்லது அடையாளைங்காண முடியாத வடிவத்தில் தக்கவைக்கப்படுவதை உறுதிப்படுத்த, நீக்கக் கொள்கையைப் பின்பற்றுவோம். தரவை அடையாளங்காண முடியாததாக Google எப்படி மாற்றுகிறது

நீங்கள் அகற்றும் வரை தகவலானது தக்கவைக்கப்படும்

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும் தரவைச் சரிசெய்யவோ அல்லது நீக்கவோ உங்களை அனுமதிக்கும் பல்வேறு சேவைகளை வழங்குகிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் பின்வருபவற்றைச் செய்யலாம்:

இந்தத் தரவை அகற்றுவதற்கு நீங்கள் தேர்வுசெய்யும் வரை, இதை உங்கள் Google கணக்கில் வைத்திருப்போம். மேலும், Google கணக்கில் உள்நுழையாமல் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், எங்கள் சேவைகளை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்திய சாதனம், உலாவி அல்லது பயன்பாடு போன்றவற்றுடன் இணைக்கப்பட்ட சில தகவல்களை நீக்குவதற்கான திறனையும் உங்களுக்கு வழங்குவோம்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதியாகும் தரவு

சில நேரங்களில், தரவை நீக்குவதற்கான வழியை வழங்குவதற்கு மாறாக, முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு அதைச் சேமிப்போம். ஒவ்வொரு தரவு வகைக்கும், அதைச் சேகரிப்பதற்கான காரணத்தின் அடிப்படையில் காலவரையை அமைக்கிறோம். எடுத்துக்காட்டாக, பல்வேறு வகையான சாதனங்களில் எங்கள் சேவைகள் சரியாகக் காட்டப்படுவதை உறுதிசெய்ய, உலாவியின் அகலத்தையும் உயரத்தையும் 9 மாதங்கள் வரை நாங்கள் தக்கவைத்திருக்கக்கூடும். அமைக்கப்பட்ட காலகட்டங்களில் இருக்கும் குறிப்பிட்ட தரவை அடையாளைங்காண முடியாததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். எடுத்துக்காட்டாக, IP முகவரியின் பகுதியை 9 மாதங்கள் கழித்தும் குக்கீ தகவலை 18 மாதங்கள் கழித்தும் அகற்றுவதன் மூலம், சேவையகப் பதிவுகளில் உள்ள விளம்பரத் தரவை அடையாளங்காண முடியாததாக மாற்றுகிறோம்.

உங்கள் Google கணக்கு நீக்கப்படும் வரை, தகவலானது தக்கவைக்கப்படும்

பயனர்கள் எங்கள் அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்றும் எங்கள் சேவைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும் நாங்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் சில தரவு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் Google கணக்கின் ஆயுட்காலம் முழுவதும் அதை அப்படியே வைத்திருப்போம். எடுத்துக்காட்டாக, எனது செயல்பாடு என்பதில் இருந்து குறிப்பிட்ட Google தேடலை நீக்கிய பிறகு, எப்போதெல்லாம் நீங்கள் தேடுகிறீர்கள் என்பது பற்றிய தகவலை நாங்கள் வைத்துக்கொள்ளக்கூடும், ஆனால் என்ன தேடினீர்கள் என்பதை அல்ல. உங்கள் Google கணக்கை நீக்கும் போது, எப்போதெல்லாம் தேடுகிறீர்கள் என்பது பற்றிய தகவலும் அகற்றப்படும்.

வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக, தகவலானது நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளப்படும்

சில நேரங்களில், வணிக மற்றும் சட்டப்பூர்வத் தேவைகள், குறிப்பிட்ட தகவலை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ள எங்களைக் கட்டாயப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, Google உங்களுக்காக பேமன்ட்டைச் செயல்படுத்தும்போதோ அல்லது நீங்கள் Googleக்குப் பணம் செலுத்தும்போதோ, வரி மற்றும் கணக்கிடல் நோக்கங்களுக்காகத் தேவைப்படுவதால், இந்தத் தரவை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்திருப்போம். சில தரவை நாங்கள் தக்கவைத்துக்கொள்ளக்கூடியதற்கான காரணங்கள்:

பாதுகாப்பான மற்றும் முழுமையான நீக்குதலை இயக்குதல்

உங்கள் Google கணக்கில் உள்ள தரவை நீக்கும் போது, தயாரிப்பில் இருந்தும் எங்கள் அமைப்புகளில் இருந்தும் அதை அகற்றுவதற்கான செயல்பாட்டை உடனடியாகத் தொடங்குவோம். முதலில், அதைப் பார்வையிலிருந்து உடனடியாக அகற்றுவோம், மேலும் அந்தத் தரவை இனி உங்கள் Google அனுபவத்தைத் தனிப்பயனாக்குவதற்குப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, "எனது செயல்பாடு" டாஷ்போர்டிலிருந்து நீங்கள் பார்த்த வீடியோவை நீக்கினால், அந்த வீடியோவிற்கான உங்கள் பார்வைச் செயல்நிலையைக் காட்டுவதை YouTube உடனடியாக நிறுத்தும்.

பிறகு, எங்கள் சேமிப்பு அமைப்புகளில் இருந்து தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்கான செயல்பாட்டைத் தொடங்குவோம். எதிர்பாராத தரவு இழப்பிலிருந்து பயனர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க, பாதுகாப்பான நீக்கம் முக்கியமானதாகும். எங்கள் சேவையகத்திலிருந்து தரவை முழுமையாக நீக்குவது என்பது, பயனரின் மன அமைதிக்குச் சமமாக முக்கியமானதாகும். வழக்கமாக இந்தச் செயல்பாட்டிற்கு, நீக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மாதங்கள் ஆகும். ஒருவேளை தரவானது தற்செயலாக அகற்றப்பட்டால், ஒரு மாதம் வரையிலான மீட்புக் காலமும் இதில் அடங்கும்.

தரவு நீக்கப்பட்ட ஒவ்வொரு Google சேமிப்பக அமைப்பும், பாதுகாப்பான மற்றும் முழுமையான நீக்கத்திற்கு, அதற்கென்று விரிவான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. எல்லாத் தரவும் நீக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்வதற்கான அமைப்பின் வழியே தொடர்ச்சியாகக் கடந்து செல்லுதல்கள் அல்லது தவறுகளில் இருந்து மீட்டெடுப்பதற்கு அனுமதிப்பதற்கான சிறிய தாமதங்கள் ஆகியவை இதில் அடங்கலாம். விளைவாக, தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்குக் கூடுதல் நேரம் தேவைப்படும் போது, நீக்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

எங்கள் சேவைகள், என்க்ரிப்ட் செய்த காப்புப் பிரதிச் சேமிப்பகத்தை, சாத்தியமுள்ள ஆபத்துகளில் இருந்து மீட்டெடுக்க உதவுவதற்கான மற்றொரு பாதுகாப்பு அடுக்காகப் பயன்படுத்துகின்றன. இந்த அமைப்புகளில் தரவுகள் 6 மாதங்கள் வரை அப்படியே இருக்க முடியும்.

எந்த நீக்குதல் செயல்பாட்டையும் போலவே, வழக்கமான பராமரிப்பு, எதிர்பாராத தடங்கல்கள், பிழைகள் அல்லது எங்கள் நெறிமுறைகளின் தோல்விகள் மூலம், இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்ட செயல்பாடுகள் மற்றும் காலவரைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும். அதுபோன்ற சிக்கல்களைக் கண்டறியவும் தீர்க்கவும் வடிவமைக்கப்பட்ட அமைப்புகளை நாங்கள் பராமரித்து வருகிறோம்.

பாதுகாப்பு, மோசடி & முறைகேடுத் தடுப்பு

விளக்கம்

மோசடி, முறைகேடு மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல் ஆகியவற்றில் இருந்து உங்களை, பிறரை மற்றும் Googleஐப் பாதுகாப்பதற்கு.

சூழ்நிலைகள்

எடுத்துக்காட்டாக, ஒருவர் விளம்பர மோசடி செய்வதாக Google சந்தேகிக்கும் போது பாதுகாப்பதற்கு.

நிதி தொடர்பான பதிவுசெய்தல்

விளக்கம்

Google நீங்கள் பணம் செலுத்துவதைச் செயல்படுத்துவது அல்லது Googleக்கு நீங்கள் பணம் செலுத்துவது உள்ளிட்ட, நிதிப் பரிமாற்றங்களுக்கு Googleஐ நீங்கள் பயன்படுத்தும் போது. இந்தத் தகவலின் நீண்டகால தக்கவைப்பானது, கணக்கிடல், வழக்குத் தீர்வு மற்றும் வரி, உரிமைகோராதவற்றைத் திருப்பியளித்தல், பணமோசடித் தடுப்பு மற்றும் பிற நிதிக் கட்டுப்பாடுகளுக்கு இணங்குதல் போன்ற நோக்கங்களுக்காக அடிக்கடி தேவைப்படுகிறது.

சூழ்நிலைகள்

எடுத்துக்காட்டாக, Play ஸ்டோரில் இருந்து பயன்பாடுகளை வாங்கும்போதோ அல்லது Google Store இலிருந்து தயாரிப்புகளை வாங்கும் போதோ தேவைப்படும்.

சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறைத் தேவைகளுடன் இணங்குதல்

விளக்கம்

பொருந்தக்கூடிய சட்டம், கட்டுப்பாடுகள், சட்டச் செயலாக்கம் அல்லது பின்பற்ற வேண்டிய அரசுக் கோரிக்கையைப் பூர்த்தி செய்வதற்கு அல்லது சாத்தியமான மீறல்களின் விசாரணை உள்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை அமல்படுத்துவதற்குத் தேவைப்படும்.

சூழ்நிலைகள்

எடுத்துக்காட்டாக, சட்டப்பூர்வ சம்மனை Google பெற்றால் தேவைப்படும்.

எங்கள் சேவைகளின் தொடர்ச்சியை உறுதிசெய்தல்

விளக்கம்

உங்களுக்கும் பிற பயனர்களுக்குமான தொடர்ச்சியான சேவையை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும்.

சூழ்நிலைகள்

எடுத்துக்காட்டாக, நீங்கள் தகவலைப் பிற பயனர்களுடன் பகிரும் போது (வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது போன்றவை), உங்கள் Google கணக்கில் இருந்து அதை நீக்குவதன் மூலம், பெறுநர்கள் பராமரிக்கும் நகல்களை அகற்ற முடியாது.

Google உடனான நேரடித் தகவல்தொடர்புகள்

விளக்கம்

நீங்கள் நேரடியாக Googleஐ வாடிக்கையாளர் ஆதரவு சேனல், கருத்துப் படிவம் அல்லது பிழை அறிக்கை போன்றவற்றின் மூலம் தொடர்புகொண்டால், அந்தத் தொடர்புகளின் நியாயமான பதிவுகளை Google தக்கவைத்துக்கொள்ளக்கூடும்.

சூழ்நிலைகள்

எடுத்துக்காட்டாக, Gmail அல்லது இயக்ககம் போன்ற Google பயன்பாட்டிலிருந்து கருத்துத் தெரிவிக்கும்போது, Google தக்கவைத்துக்கொள்ளலாம்.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு