இது எங்கள் சேவை விதிமுறைகளின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பாகும். தற்போதைய பதிப்பு அல்லது எல்லா கடந்தகால பதிப்புகள் என்பதைப் பார்க்கவும்.

Google சேவை விதிமுறைகள்

கடைசியாக மாற்றப்பட்டது: 14 ஏப்ரல், 2014 (காப்பகப்படுத்தியப் பதிப்புகளைக் காண்க)

Google உங்களை வரவேற்கிறது!

எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் (“சேவைகள்”) பயன்படுத்துவதற்கு நன்றி. சேவைகள் Google Inc. (“Google”), மூலம் வழங்கப்படுகின்றன. 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States முகவரியில் அமைந்துள்ளது.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள். இவற்றை கவனமாகப் படிக்கவும்.

எங்கள் சேவைகள் பல்வகையானவை, அதனால் சில நேரங்களில் கூடுதல் விதிமுறைகள் அல்லது தயாரிப்புப் பொருள் தேவைகள் (வயது தேவை உள்பட) பொருந்தக்கூடும். தொடர்புடைய சேவைகளில் கூடுதல் விதிமுறைகள் கிடைக்கும் மேலும் அவற்றை நீங்கள் பயன்படுத்தும்போது எங்கள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவை கருதப்படும்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது

சேவையில் உங்களுக்கென வழங்கப்பட்டிருக்கும் கொள்கைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

எங்கள் சேவைகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவையில் தலையிடுவது அல்லது நாங்கள் வழங்கிய இடைமுகம் மற்றும் வழிமுறைகளைத் தவிர்த்து வேறு முறையைப் பயன்படுத்தி அணுக முயற்சிக்கக் கூடாது. பொருந்தக்கூடிய ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் உள்பட, சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டபடியே எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளுடன் இணங்காதபட்சத்தில் அல்லது சந்தேகத்திற்குரிய தவறான நடத்தைக் குறித்து நாங்கள் விசாரிக்கும்போதும் எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்காமல் இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது எங்கள் சேவைகளில் உள்ள எந்த அறிவுசார் சொத்து அல்லது நீங்கள் அணுகும் உள்ளடக்கத்திற்கு உரிமையை வழங்காது. உரிமையாளரிமிடருந்து அனுமதி பெற்றிருந்தால் அல்லது சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தால் தவிர எங்கள் சேவைகளில் இருக்கும் உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்த முடியாது. எங்கள் சேவைகளில் பயன்படுத்தப்படும் எந்த பிராண்டிங் அல்லது லோகோக்கள் போன்ற எதையும் பயன்படுத்த இந்த விதிமுறைகள் உங்களுக்கு அனுமதி வழங்காது. எங்கள் சேவைகளில் காண்பிக்கப்பட்ட அல்லது அதில் இடம்பெற்றுள்ள சட்ட அறிவிப்புகளை அகற்றவோ, தெளிவற்றதாக்கவோ அல்லது மாற்றுவதோ கூடாது.

Google உடன் தொடர்பற்ற சில உள்ளடக்கத்தை எங்கள் சேவைகள் காண்பிக்கக்கூடும். இந்த உள்ளடக்கத்திற்கு அதை வழங்கியவரே முழு பொறுப்பாகும். சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும் அல்லது எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தைக் கண்டறிய நாங்கள் அதை மதிப்பாய்வு செய்து எங்களது கொள்கைகளையும் அல்லது சட்டத்தையும் மீறுவதாக கருதுவதை அகற்றுவோம் அல்லது காண்பிக்க மாட்டோம். ஆனால், இது உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்வதாக பொருள் கிடையாது, அவ்வாறு நாங்கள் செய்வோம் என்றும் நீங்கள் கருத வேண்டாம்.

சேவைகளுடன் தொடர்புடைய உங்கள் பயன்பாட்டிற்காக, சேவை அறிவிப்புகள், நிர்வாக செய்திகள் மற்றும் பிற தகவலை நாங்கள் உங்களுக்கு அனுப்பி வைப்போம். அதுபோன்ற சில தகவல்தொடர்புகளிலிருந்து நீங்கள் வெளியேறலாம்.

எங்களின் சில சேவைகள் மொபைல் சாதனங்களில் கிடைக்கின்றன. உங்களைத் திசைத்திருப்பி, போக்குவரத்து அல்லது பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்றுவதிலிருந்துத் தடுக்கும் வழியில் இந்தச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் Google கணக்கு

எங்களது சில சேவைகளைப் பயன்படுத்த, Google கணக்கைக் கொண்டிருப்பது அவசியம். நீங்கள் சொந்தமாக ஒரு Google கணக்கை உருவாக்கலாம் அல்லது பணிவழங்குநர் அல்லது கல்வி நிறுவனம் போன்று நிர்வாகியால் உங்களுக்கென ஒரு Google கணக்கு ஒதுக்கப்படக்கூடும். ஒரு நிர்வாகியால் ஒதுக்கப்பட்ட Google கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், வேறுபட்ட அல்லது கூடுதல் விதிமுறைகள் பொருந்தக்கூடும் மேலும் உங்கள் கணக்கை நிர்வாகி அணுக அல்லது முடக்க முடியும்.

உங்கள் Google கணக்கைப் பாதுகாக்க, உங்கள் கடவுச்சொல்லை ரகசியமாக வைத்திருக்கவும். உங்கள் Google கணக்கில் அல்லது அதன்மூலம் ஏற்படும் செயல்பாட்டிற்கு நீங்களே பொறுப்பு. மூன்றாம் தரப்பினர் பயன்பாடுகளில் உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க முயற்சிக்கவும். உங்கள் கடவுச்சொல் அல்லது Google கணக்கின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு பற்றித் தெரிந்தால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தனியுரிமை மற்றும் பதிப்புரிமை பாதுகாப்பு

உங்களின் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படி பராமரிப்போம் மற்றும் எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தனியுரிமையை நாங்கள் எப்படி பாதுகாப்போம் என்பதை Google இன் தனியுரிமைக் கொள்கைகள் விளக்கும். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கைகளின்படி சில தரவை Google பயன்படுத்தலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

U.S. Digital Millennium Copyright சட்டத்தில் கூறியுள்ள செயல்முறையின்படி சந்தேகத்துக்குரிய பதிப்புரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளுக்குப் பதிலளிப்பது மற்றும் மீண்டும் இத்தகைய மீறலைச் செய்பவர்களின் கணக்கை நிறுத்துவோம்.

பதிப்புரிமைதாரர்கள் தங்களின் அறிவுசார் சொத்தினை இணையத்தளங்கள் மூலம், வலையுலகத்தில் நிர்வகிப்பதற்கு வேண்டிய தகவலை நாங்கள் வழங்குவோம். உங்கள் பதிப்புரிமைகளை யாரேனும் மீறுவதாக கருதி, அதை எங்களிடம் தெரியப்படுத்த விரும்பினால் அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பது குறித்த தகவலையும் அந்த அறிக்கைகளுக்குப் பதிலளிப்பது தொடர்பான Google இன் கொள்கையையும் எங்களின் உதவி மையத்தில் காணலாம்.

எங்கள் சேவைகளில் உங்கள் உள்ளடக்கம்

எங்களின் சில சேவைகள் உள்ளடக்கத்தைப் பதிவேற்ற, சமர்ப்பிக்க, சேமிக்க, அனுப்ப அல்லது பெற உங்களை அனுமதிக்கின்றன. அந்த உள்ளடக்கத்தில் நீங்கள் கொண்டிருக்கும் எந்த அறிவுசார் சொத்து உரிமைகளுக்குமான உரிமையை நீங்கள் தேக்கிக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக சொல்வதென்றால், உங்களுடையது எல்லாம், உங்களுக்கே சொந்தம்.

எங்கள் சேவைகளில் அல்லது எங்கள் சேவைகள் மூலமாக உள்ளடக்கத்தைப் பதிவேற்றுதல், சமர்ப்பித்தல், சேமித்தல், அனுப்புதல் அல்லது பெறுதலை மேற்கொள்ளும்போது, அதை நாங்கள் (மற்றும் எங்களுடன் இணைந்து பணி செய்பவர்கள்) பயன்படுத்துவதற்கு, வழங்குவதற்கு, சேமிப்பதற்கு, மறுஅமைப்பு செய்வதற்கு, மாற்றுவதற்கு, வழிப் பொருட்கள் உருவாக்குவதற்கு (எங்கள் சேவைகளில் உங்கள் உள்ளடக்கம் சிறந்த முறையில் செயலாற்றுவதற்கு நாங்கள் செய்யும் மொழிபெயர்த்தல், தழுவல்கள் அல்லது பிற மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள்) தொடர்புகொள்வதற்கு, வெளியிடுவதற்கு, பொதுவில் செயல்படுத்துவதற்கு, பொதுவில் காண்பிப்பதற்கு மற்றும் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு உலகளவில் அதற்கான உரிமத்தை Googleக்கு வழங்குகிறீர்கள். இந்த உரிமத்தில் நீங்கள் வழங்கிய உரிமைகளை, எங்கள் சேவைகளை செயல்படுத்தல், சீர்படுத்துதல் மற்றும் மேம்படுத்தல் ஆகிய காரணங்களுக்கும், மேலும் புதிய சேவை ஒன்றை உருவாக்கவும் வழங்கியுள்ளீர்கள். எங்கள் சேவைகளைப் (எடுத்துக்காட்டாக, Google வரைபடங்களில் நீங்கள் சேர்த்துள்ள வணிகப் பட்டியலிடல்) பயன்படுத்துவதை நிறுத்தினாலும் இந்த உரிமம் தொடரும். குறிப்பிட்ட சேவைகள் அதற்கு வழங்கிய உள்ளடக்கத்தை அணுக மற்றும் அகற்றுவதற்கான வழிகளை உங்களுக்கு வழங்குகின்றன. மேலும் நமது சில சேவைகளில், அந்த சேவைகளில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தை பயன்படுத்தும் குறிப்பிட்ட விதிமுறைகள் அல்லது கட்டமைப்புகள் உள்ளன. எங்கள் சேவைகளுக்குச் சமர்ப்பிக்கும் உங்கள் உள்ளடக்கத்திற்கு இந்த உரிமத்தை வழங்குவதற்கான தகுந்த உரிமைகளை பெற்றுள்ளீர்களா என்பதை உறுதி செய்க.

தனிப்பயனாக்கப்பட்ட தேடல் முடிவுகள், தொகுக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் ஸ்பேமையும் தீம்பொருளையும் கண்டறிதல் போன்ற தனிப்பட்டதுடன் தொடர்புடைய தயாரிப்பு அம்சங்களை உங்களுக்கு வழங்க எங்கள் தானியங்கு அமைப்புகளானது உங்கள் உள்ளடக்கத்தை (மின்னஞ்சல்கள் உள்பட) ஆய்வு செய்யும். இந்த ஆய்வானது, உங்கள் உள்ளடக்கம் அனுப்பப்படும்போது, பெறப்படும்போது அல்லது சேமிக்கப்படும்போது மேற்கொள்ளப்படும்.

உங்களிடம் Google கணக்கு இருந்தால், Google இல் அல்லது உங்கள் Google கணக்குடன் இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் பயன்பாடுகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களுடன் (அதாவது +1கள், நீங்கள் எழுதும் மதிப்புரைகள் மற்றும் நீங்கள் இடுகையிடும் கருத்துகள் ஆகியவற்றுடன்) உங்கள் சுயவிவரப் பெயர், சுயவிவரப் புகைப்படம் ஆகியவற்றை விளம்பரங்கள் மற்றும் பிற தொழில்ரீதியிலான சூழல்களில் காண்பிப்பது உள்பட, எங்கள் சேவைகளில் நாங்கள் காண்பிக்கலாம். உங்கள் Google கணக்கில் பகிர்தல் அல்லது தெரிவுநிலை அமைப்புகளை வரம்பிடுவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மதிப்போம். எடுத்துக்காட்டாக, உங்கள் பெயர் மற்றும் படம் ஆகியவை விளம்பரத்தில் தோன்றாதவாறு உங்கள் அமைப்புகளை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

உள்ளடக்கத்தை Google எப்படி பயன்படுத்துகிறது மற்றும் சேமிக்கிறது என்பது பற்றிய மேலும் தகவலை, தனியுரிமைக் கொள்கை அல்லது குறிப்பிட்ட சேவைகளின் கூடுதல் விதிமுறைகளில் அறியலாம். எங்கள் சேவைகள் பற்றிய கருத்து அல்லது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தால், உங்கள் கருத்து அல்லது பரிந்துரைகளை உங்களுக்கு கடமை எதுவுமின்றி பயன்படுத்துவோம்.

எங்கள் சேவைகளில் உள்ள மென்பொருள்கள் பற்றி

சேவைக்குப் பதிவிறக்கக்கூடிய மென்பொருள் தேவைப்பட்டாலோ அல்லது அதை உள்ளடக்கியிருந்தாலோ, புதிய பதிப்பு அல்லது அம்சம் காணப்பட்டால் உங்கள் சாதனத்தில் இந்த மென்பொருள் தானாகவே புதுப்பிக்கப்படும். சில சேவைகள் உங்கள் தன்னியக்கப் புதுப்பிப்பு அமைப்புகளை மாற்றம் செய்ய அனுமதிக்கும்.

சேவைகளின் பகுதியாக, Google உங்களுக்கு வழங்கிய மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட, உலகளாவிய, உரிமை பங்கீட்டு தொகை யற்ற, ஒதுக்கப்படாத மற்றும் பிரத்யேகமற்ற உரிமத்தை Google வழங்குகிறது. இந்த உரிமமானது, விதிமுறைகளுக்குட்பட்டு, Google வழங்கும் சேவைகளின் நன்மைகளைப் பயன்படுத்தி அனுபவிப்பதற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எங்களது சேவைகளின் எந்தவொரு பகுதியையும் அல்லது மென்பொருள் உள்ளிட்டவற்றை நகலெடுக்கவோ, திருத்தவோ, விநியோகிக்கவோ, விற்கவோ அல்லது குத்தகைக்கோ எடுக்க முடியாது. மேலும் இந்த வரையறைகளை சட்டங்கள் தடைசெய்யாதவரை அல்லது எங்களின் எழுத்துப்பூர்வ அனுமதி இருந்தால் தவிர, மீண் மருவாக்கம் அல்லது இந்த மென்பொருளின் மூலக் குறியீட்டை வெளிக்கொணர முயற்சிக்கக்கூடாது.

எங்களுக்கு திறந்த மூலநிரல் மென்பொருள் முக்கியமானது. எங்கள் சேவைகளில் பயன்படுத்திய சில மென்பொருளை உங்களுக்கு திறந்த மூலநிரல் உரிமத்தின் கீழ் கிடைக்கும்படி செய்வோம். திறந்த மூலநிரல் உரிமத்தில் ஒதுக்கிடல் இருப்பதால், அது சில விதிமுறைகளை மாற்றியமைக்கும்.

எங்கள் சேவைகளை திருத்துதல் மற்றும் நிறுத்துதல்

எமது சேவைகளைத் தொடர்ந்து மாற்றுவதோடு, மேம்படுத்தியும் வருகிறோம். சேவைகளில் செயல்பாடுகள் அல்லது அம்சங்களை சேர்ப்போம் அல்லது அகற்றுவோம், மேலும் சேவையை இடைநீக்கம் அல்லது நிறுத்தவும் செய்வோம்.

எந்த நேரத்திலும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்காக நாங்கள் வருந்துவோம். உங்களுக்கு சேவைகளை வழங்குவதிலிருந்து Google நிறுத்தலாம், அல்லது எந்த நேரத்திலும் எங்கள் சேவைகளுக்குப் புதிய வரம்புகளை சேர்க்கலாம் அல்லது உருவாக்கலாம்.

உங்கள் தரவு உங்களுக்கு சொந்தமானது என்றும் தரவிற்கான உங்கள் அணுகு முறையை பாதுகாப்பது முக்கியமானது என்றும் நம்புகிறோம். ஒரு சேவையை நிறுத்தும்பொழுது, சாத்தியப்படும் இடங்களில் நாங்கள் முன் அறிவிப்புடன் அந்த சேவையிலிருந்து தகவலை வெளியேற்றி பெறும் வாய்ப்பை அளிப்போம்.

எங்கள் உத்திரவாதங்கள் மற்றும் மறுப்புகள்

வணிக முறையில் நியாயமான ஆற்றல் நிலை மற்றும் பேணுதலை பயன்படுத்தி சேவைகளை வழங்குகிறோம், அதைப் பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள் என நம்புகிறோம். உறுதியிட்டு கூற முடியாத சில விஷயங்களும் எங்கள் சேவைகளில் உள்ளன.

இந்த விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் வெளிப்படையாக வெளியிட்டுள்ளதைத் தவிர்த்து, GOOGLE மற்றும் அதன் வழங்குபவர்கள் அல்லது விநியோகஸ்தர்கள், சேவைகள் குறித்து எந்தவொரு குறிப்பிட்ட வாக்குறுதியையும் அளிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, சேவைகளில் காணப்படும் உள்ளடக்கம், சேவைகளின் குறிப்பிட்ட செயல் அல்லது அதன் நம்பகத்தன்மை, கிடைக்கும்தன்மை அல்லது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் குறித்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நாங்கள் அளிக்கமாட்டோம். “உள்ளது உள்ளபடியே” சேவைகளை வழங்குகிறோம்.

வணிகத்திறனின் மறைமுக உத்தரவாதம், குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, மீறல் அல்லாத போன்ற சில உத்தரவாதங்களுக்காக சட்ட எல்லைகள் வழங்கப்படுகின்றன. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குட்பட்டு, எல்லா உத்தரவாதங்களையும் நீக்குகிறோம்.

எங்கள் சேவைகளுக்கான பொறுப்பு

சட்டத்தால் அனுமதிக்கப்பட்டால் லாபங்கள், வருவாய்கள் இழப்பு அல்லது தரவு, நிதி சார்ந்த இழப்புகள் அல்லது மறைமுகமான, சிறப்பான, விளைவான, முன்மாதிரியற்ற அல்லது தண்டனைக்குரிய சேதங்களுக்கு GOOGLE, GOOGLE இன் வழங்குநர்கள், விநியோகஸ்தர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குட்பட்டு, மறைமுக உத்தரவாதங்கள் உள்ளிட்ட, இந்த விதிமுறைகளின் படி எந்த உரிமைகோரலுக்கும் GOOGLE, அதன் வழங்குநர்கள், விநியோகஸ்தர்களின் மொத்த பொறுப்பானது சேவைகளைப் (அல்லது சேவைகளை உங்களுக்கு மீண்டும் வழங்க, நாங்கள் தேர்வு செய்தால்) பயன்படுத்த நீங்கள் செலுத்திய தொகைக்கு உட்பட்டு உள்ளது.

இவை எல்லாவற்றிலும், எந்த இழப்பு அல்லது சேதங்கள் எதிர்பார்க்கக்கூடியவையாக இல்லையெனில் Google, அதன் வழங்குநர்கள், விநியோகஸ்தர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.

எங்கள் சேவைகளின் வணிகப் பயன்கள்

வணிகத்தின் சார்பாக எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், இந்த விதிமுறைகளை அவ்வணிகம் ஒப்புக்கொள்ளும். இது Google மற்றும் அதைச் சார்ந்தவர்கள், அலுவலர்கள், முகவர்கள் ஆகியோரை இந்த சேவைகளின் பயனிலிருந்து எழும் எவ்விதமான உரிமை வழக்கு, உரிமைகோரல் அல்லது இழப்பீடுகள், பாதிப்புகள், உரிமை வழக்குகள், தீர்ப்புகள், பொது நலவழக்கிற்கானக் கட்டணங்கள் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்கள் ஆகியவற்றின் செலவு மற்றும் கடன் உள்ளிட்ட விதிமுறைகளின் மீறல் தொடர்பான செயல் அல்லது இவைகளிலிருந்து ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றில் தீங்கற்றதாகவும் இழப்பினை திரும்பியளிக்கும் வகையிலும் விளங்கும்.

இந்த விதிமுறைகளைப் பற்றி

சேவைக்குப் பொருந்தும் இந்த விதிமுறைகளையும் அல்லது கூடுதல் விதிமுறைகளையும் மாற்றக்கூடும், எடுத்துக்காட்டாக சட்டத்தில் மாற்றங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் விதிமுறைகள் மாறலாம் அல்லது எங்கள் சேவைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் விதிமுறைகளைத் தொடர்ந்துப் பார்க்க வேண்டும். இந்தப் பக்கத்தில் இந்த விதிமுறைகளுக்கான மாற்றங்களின் அறிவிப்பை இடுகையிடுவோம். குறிப்பிட்ட சேவையில் மாற்றப்பட்ட கூடுதல் விதிமுறைகளின் அறிவிப்பை இடுகையிடுவோம். இருப்பதைப் பாதிக்கும் வகையில் மாற்றங்கள் பயன்படுத்தப்படாது மேலும் அவை இடுகையிட்ட பதினான்கு நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். ஆயினும், சேவையின் புதிய செயல்களைக் குறிப்பிடும் மாற்றங்கள் அல்லது சட்டக் காரணங்களுக்காக செய்யும் மாற்றங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும். சேவைக்கான மாற்றப்பட்ட விதிமுறைகளை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அந்த சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இந்த விதிமுறைகள் மற்றும் கூடுதல் விதிமுறைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால், அந்த முரண்பாட்டைக் கூடுதல் விதிமுறைகள் கட்டுப்படுத்தும்.

இந்த விதிமுறைகள் Googleக்கும் உங்களுக்கும் இடையேயான உறவைக் கட்டுப்படுத்தும். இது மூன்றாம் தரப்பினர் பயன்பெறும் உரிமைகளை உருவாக்காது.

இந்த விதிமுறைகளுடன் நீங்கள் இணங்கவில்லையெனில், உடனடியாக நடவடிக்கை எடுக்கமாட்டோம், இதன்பொருள் எங்கள் (எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பது போன்ற) உரிமையை கைவிடுகிறோம் என்பதல்ல.

குறிப்பிட்ட விதிமுறை செயல்படுத்தக்கூடியது இல்லை எனில், மற்ற விதிமுறைகளை இது பாதிக்காது.

சட்ட முரண்பாடுகள் குறித்த விதிமுறைகளை தவிர்த்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சட்ட விதிமுறைகள் இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் தொடர்பாக எழுகின்ற எல்லா உரிமைக்கோரலுக்கும் பொருந்தும். இந்த விதிமுறைகள் அல்லது சேவைகள் தொடர்பான, சேவைகளிலிருந்து எழுகின்ற எல்லா உரிமைகோரல்களும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான்டா கிளாரா நாட்டின் மாநில நீதிமன்றங்கள் அல்லது ஃபெடரல் நீதிமன்றங்களில் தனிப்பட்ட வரம்பெல்லைக்குள் வழக்காடப்படும். மேலும் நீங்களும் Google உம் தனிப்பட்ட சட்ட ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

Google ஐத் தொடர்புகொள்வது பற்றிய தகவலுக்கு, எங்களது தொடர்புப் பக்கத்தைக் காண்க.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு