தரவு அணுகலுக்கும் நீக்குதலுக்குமான வெளிப்படைத்தன்மை அறிக்கை

Googleளின் தனியுரிமைக் கொள்கையிலும், தனியுரிமை உதவி மையத்திலும் விவரித்துள்ளபடி பயனர்கள் தங்கள் தகவல்களை மாற்ற, நிர்வகிக்க, அணுக, ஏற்ற, நீக்க மற்றும் Google சேவைகள் அனைத்திலும் தங்கள் தனியுரிமையைக் கட்டுப்படுத்த பல கருவிகளை வழங்குகிறோம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான அமெரிக்கப் பயனர்கள் Googleளின் எனது தரவைப் பதிவிறக்கு அம்சத்தைப் பயன்படுத்துவதுடன் Googleளின் எனது செயல்பாடுகள் அம்சத்தைப் பயன்படுத்தி தங்கள் தரவில் சிலவற்றை நீக்குகிறார்கள். பல Google சேவைகளில் இருந்து பயனர்கள் பார்க்க, பதிவிறக்க, நீக்க விரும்பும் குறிப்பிட்ட தரவு வகைகளைத் தேர்ந்தெடுக்க இந்தக் கருவிகள் உதவுகின்றன. இவற்றில் பயனர் கோரிக்கைகள் தானாகவே செயலாக்கப்படும். மேலும், கலிஃபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டம் (California Consumer Privacy Act - CCPA) போன்ற குறிப்பிட்ட தனியுரிமைச் சட்டங்கள் வழங்கும் உரிமைகளைப் பெற பயனர்கள் Googleளைத் தொடர்புகொள்ளலாம்.

2022ல் இந்தக் கருவிகள் மற்றும் தொடர்புகொள்ளும் முறைகள் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கூடுதல் தகவல்கள் உள்ளன:

கோரிக்கை வகைகோரிக்கைகளின் எண்ணிக்கைமுழுமையாகவோ பகுதிஅளவிலோ நிறைவுசெய்யப்பட்ட கோரிக்கைகள்ஏற்றுக்கொள்ளப்படாத கோரிக்கைகள்விரிவான பதிலுக்கான சராசரி நேரம்
எனது தரவைப் பதிவிறக்கு என்பதன் பயன்பாடு*தோராயமாக 7.5 மில்லியன்தோராயமாக 7.5 மில்லியன்பொருந்தாது (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)1 நாளுக்கும் குறைவு (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)
எனது செயல்பாடுகளை நீக்குதல் என்பதன் பயன்பாடு*தோராயமாக 54.7 மில்லியன்தோராயமாக 54.7 மில்லியன்பொருந்தாது (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)1 நாளுக்கும் குறைவு (தானாகச் செயலாக்கப்படும் கோரிக்கைகள்)
தெரிந்துகொள்வதற்கான கோரிக்கைகள் (Googleளைத் தொடர்புகொள்வதன் மூலம்)**839839020 நாட்கள்
நீக்குவதற்கான கோரிக்கைகள் (Googleளைத் தொடர்புகொள்வதன் மூலம்)**8080023 நாட்கள்

தனியுரிமைக் கொள்கையில் விவரித்துள்ளபடி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை Google விற்பதில்லை. அதுபோலவே, தனிப்பட்ட தகவல்கள் விற்கப்படுவதற்கான ஒப்புதலை நீக்கும் கோரிக்கைகளைப் பயனர்கள் சமர்ப்பிக்கும்போது எங்கள் நடைமுறைகள், நாங்கள் வழங்கும் உறுதிகள், Googleளுக்கு வெளியே அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படக்கூடிய சில சூழல்கள், அத்தகைய பகிர்வின்போது அவர்களிடமுள்ள கட்டுப்பாடுகள் ஆகிய தகவல்களை வழங்கிப் பதிலளிப்போம்.

* அமெரிக்காவில் வசிக்கும் பயனர்களுக்கான தரவு

** கலிஃபோர்னியாவில் வசிப்பதாகத் தங்களை அடையாளப்படுத்தும் பயனர்களுக்கான தரவு

Google ஆப்ஸ்
முதன்மை மெனு