தனியுரிமையும் விதிமுறைகளும்
தனியுரிமையும் விதிமுறைகளும்

டீன் ஏஜர்களுக்கான தனியுரிமை வழிகாட்டி

Googleளில் உங்கள் தனியுரிமை

தனியுரிமை குறித்து எங்களிடம் கேட்கப்படும் தரவு என்றால் என்ன? என்பது போன்ற சில முக்கியக் கேள்விகளுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம். மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.

உங்கள் இருப்பிடம்

Googleளுக்கு எனது இருப்பிடம் தெரியுமா?

நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போதெல்லாம் ஆப்ஸும் தளங்களும் உங்கள் இருப்பிடத்தைத் தோராயமாகக் கணிக்க முடியும், அதுபோல Googleளும் கணிக்க முடியும். சாதன அமைப்புகளைப் பொறுத்து உங்கள் துல்லியமான இருப்பிடத்தையும் Google தெரிந்துகொள்ள முடியும். (எனது இருப்பிடம் எவ்வளவு துல்லியமானது? என்பதைப் பாருங்கள்)

Search, Maps, Google Assistant போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்கள் Googleளில் தேடும்போது, மிகப் பயனுள்ள முடிவுகளை வழங்குவதற்கு உங்கள் தற்போதைய இருப்பிடம் குறித்த தகவல்கள் பயன்படுத்தப்படக்கூடும். உதாரணமாக, நீங்கள் உணவகங்களைத் தேடினால் பெரும்பாலும் உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள உணவகங்களே மிகவும் உதவிகரமான முடிவுகளாக இருக்கும்.

உங்கள் இருப்பிடம் குறித்த தகவல்களை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பாருங்கள்

எனது இருப்பிடத்தை ஆன்/ஆஃப் செய்வது எப்படி?

Googleளில் தேடும்போது நீங்கள் எந்தப் பகுதியிலிருந்து தேடுகிறீர்களோ அந்தத் தோராய இருப்பிடத்தை Google எப்போதும் கணிக்கும். இணையத்துடன் இணைத்து நீங்கள் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு ஆப்ஸ் அல்லது இணையதளத்தைப் போலவே Googleளும் உங்கள் சாதனத்தின் IP முகவரியின் அடிப்படையில் உங்கள் இருப்பிடத்தைக் கணிக்க முடியும். கூடுதல் தகவல்களுக்கு, எனது இருப்பிடம் Googleளுக்கு எப்படித் தெரியும்? என்பதைப் பாருங்கள்.

Googleளைப் பயன்படுத்தும்போது உங்கள் துல்லியமான இருப்பிடத்தை அனுப்ப வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய, தனிப்பட்ட ஆப்ஸ், தளங்கள் மற்றும் உங்கள் சாதனத்திற்கான இருப்பிட அனுமதிகளை நீங்கள் ஆன்/ஆஃப் செய்யலாம்.

வீடு அல்லது பணியிட முகவரியை அமைத்திருக்கும் பட்சத்தில் நீங்கள் வீட்டிலோ பணியிடத்திலோ இருப்பதாக Google கண்டறிந்தால் துல்லியமான முகவரியை Google உங்கள் தேடலுக்குப் பயன்படுத்தும்.

எனது இருப்பிடம் எவ்வளவு துல்லியமானது?

உங்கள் தோராய இருப்பிடம்

Googleளில் தேடும்போது நீங்கள் எந்தப் பகுதியிலிருந்து தேடுகிறீர்களோ அந்தத் தோராய இருப்பிடத்தை Google எப்போதும் கணிக்கும். இதன் மூலம், தொடர்புடைய முடிவுகளை Google உங்களுக்கு வழங்க முடியும். அத்துடன், புதிய நகரத்திலிருந்து கணக்கில் உள்நுழைவது போன்ற வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டறிந்து உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும்.

தோராய இருப்பிடம் என்பது 3 சதுர கிலோமீட்டர் அளவைவிடப் பெரியதாகவும் குறைந்தபட்சம் 1,000 பயனர்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்பதால் உங்கள் தேடலின் தோராய இருப்பிடம் மூலம் உங்களை அடையாளம் கண்டறிய முடியாது. இது உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது.

உங்கள் துல்லியமான இருப்பிடம்

நீங்கள் அனுமதி வழங்கினால் Google உங்கள் துல்லியமான இருப்பிடத்தைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, “எனக்கு அருகிலுள்ள ஐஸ் கிரீம் கடை” போன்ற தேடல்களுக்கோ, ஏதேனும் ஒரு கடைக்குச் செல்வதற்கான படிப்படியான நடக்கும் வழிகளுக்கோ மிகவும் தொடர்புடைய முடிவுகளை வழங்க Googleளுக்கு உங்கள் துல்லியமான இருப்பிடம் தேவை.

துல்லியமான இருப்பிடம் என்பது நீங்கள் இருக்குமிடத்தின் (எ.கா. அந்த இடத்தின் முகவரி) துல்லியமான விவரமாகும்.

Google எவ்வாறு எனது இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது?

நீங்கள் இருக்குமிடத்தைக் கணிக்க பல்வேறு தகவல்கள் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன.

உங்கள் சாதனத்தின் IP முகவரி

ஃபோன் எண்களுக்கான பகுதிக் குறியீடுகளைப் போன்றே IP முகவரிகளும் தோராயமாகப் புவியியலை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது google.com உட்பட நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு ஆப்ஸ் அல்லது இணையதளத்தாலும் உங்கள் IP முகவரியைப் பயன்படுத்தி, உங்கள் தோராய இருப்பிடத்தைக் கணக்கிட முடியும். உங்கள் சாதனத்தின் IP முகவரி என்பது உங்கள் இணைய சேவை வழங்குநரால் உங்கள் சாதனத்திற்கு ஒதுக்கப்படுவது. இணையத்தைப் பயன்படுத்த இது தேவை.

மேலும் அறிக

உங்கள் சாதனத்தின் இருப்பிடம்

உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைப் பயன்படுத்த Google ஆப்ஸ் அல்லது தளத்திற்கு அனுமதி வழங்கினால், நீங்கள் எங்குள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம். கிட்டத்தட்ட எல்லாச் சாதனங்களின் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும், பொதுவாக அமைப்புகளில் இருப்பிட அமைப்பு உள்ளமைக்கப்பட்டிருக்கும்.

மேலும் அறிக

Googleளில் உங்கள் செயல்பாடு

உங்களது முந்தைய Google தேடல்களின் அடிப்படையில் உங்கள் தோராய இருப்பிடத்தை Google கணிக்க முடியும். உதாரணமாக, சென்னையில் தோசை எங்கு கிடைக்கும் என்று அடிக்கடி தேடினால் சென்னையிலுள்ள தேடல் முடிவுகளையே தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ளப்படும்.

மேலும் அறிக

உங்களது லேபிளிடப்பட்ட இடங்கள்

நீங்கள் வீடு அல்லது பணியிட முகவரியை அமைத்திருந்தால், நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதைக் கணிக்க Google அவற்றைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, உங்கள் வீட்டு முகவரியை அமைத்திருக்கும்போது உங்கள் IP முகவரி, முந்தைய செயல்பாடு அல்லது இருப்பிடத் தகவல்களின் பிற ஆதாரங்கள் நீங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடும் என்று தெரிவித்தால், நீங்கள் இருக்கும் இடமாக உங்கள் வீட்டின் இருப்பிடத்தை நாங்கள் பயன்படுத்துவோம்.

மேலும் அறிக

எனது இருப்பிடத்தை யாரெல்லாம் பார்க்க முடியும்?

இது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. Google இருப்பிடப் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்தினால், Google சேவைகள் முழுவதும் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தைப் பகிரலாம்.

உங்கள் இருப்பிடத்தைப் பகிர்கிறீர்களா என்று பாருங்கள்

இருப்பிடப் பகிர்வு அமைப்பு இயல்பாக ஆஃப் செய்யப்பட்டிருக்கும். உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தைப் பகிர விரும்பினால், யாருடன் பகிர விரும்புகிறீர்கள் என்பதையும் எவ்வளவு நேரத்திற்குப் பகிர விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்து உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம்.

உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தைப் பிறருடன் பகிர்தல் என்பதைப் பாருங்கள்

Googleளில் பகிர்தல்

நான் Googleளில் பகிரும்போது பிறரால் எவற்றைப் பார்க்க முடியும்?

Google சேவைகளில் உங்களைப் பற்றி பிறர் எவற்றையெல்லாம் பார்க்கலாம் என்பது நீங்கள் எவற்றை, எப்படிப் பகிர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்:

பொதுவில் பகிர்தல்

Google Maps போன்ற ஆப்ஸில் நீங்கள் பங்களித்தால், பிறர் உங்கள் பெயரையும் படத்தையும் பார்க்கலாம். உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த ஐஸ்கிரீம் ஸ்டோருக்கு நீங்கள் ரேட்டிங் வழங்கினால், பிறர் Google Mapsஸில் அந்த ஸ்டோரைக் கண்டறியும்போது உங்கள் ரேட்டிங், பெயர், படம் ஆகியவை அவர்களுக்குக் காட்டப்படும்.

தனிப்பட்ட முறையில் பகிர்தல்

படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை நீங்கள் பிறருடன் பகிரும்போது, நீங்கள் பகிர்பவற்றுடன் சேர்த்து உங்கள் பெயரும் படமும் நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்களோ அவருக்குக் காட்டப்படும்.

பிறருடன் பகிர்வதற்கு முன்பு கவனமாகச் சிந்தியுங்கள், எந்த அளவிலான அணுகலை வழங்குகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, Google Driveவில் உள்ள ஃபோல்டர்கள், Google Photosஸில் உள்ள ஆல்பங்கள் போன்றவற்றுக்கான அணுகலைப் பிறருக்குப் பகிர்ந்தால், நீங்கள் அவற்றில் புதிதாகச் சேர்ப்பவற்றையும் அவர்கள் தொடர்ந்து அணுகக்கூடும்.

நான் பகிரும் படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை யாரெல்லாம் பார்க்க முடியும்?

நீங்கள் பயன்படுத்தும் Google சேவைகளில் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பிறருடன் பகிரலாம்.

நீங்கள் பகிரும் எதையும் Google அல்லாத ஆப்ஸிலும் தளங்களிலும் கூட பிறர் மீண்டும் பகிர்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உங்கள் கணக்கில் இருந்து உள்ளடக்கத்தை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நீக்கிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஏற்கெனவே பகிர்ந்த நகல்கள் நீக்கப்படாது.

என்ன பகிர்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும், நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே பகிரவும்.

Google எனது தனிப்பட்ட தகவல்களைப் பிறருடன் பகிருமா?

சட்டப்பூர்வத் தேவைகள் போன்ற குறிப்பிட்ட சூழல்களைத் தவிர Googleளைச் சாராத நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் போன்றவர்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிரமாட்டோம்.

பள்ளி மூலம் Google கணக்கை (Google Workspace for Education கணக்கு) நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் கணக்கை நிர்வகிக்கும் பள்ளி நிர்வாகிக்கு உங்கள் தகவல்களுக்கான அணுகல் இருக்கும்.

பள்ளி நிர்வாகிகளுக்கான அணுகல்

உங்கள் Google Workspace for Education கணக்கில் உள்ள பின்வரும் தகவல்களை உங்கள் பள்ளி நிர்வாகி அணுகக்கூடும்:

  • உங்கள் மின்னஞ்சல் போன்று உங்கள் கணக்கில் சேமித்துள்ள தகவலை அணுகலாம், தக்கவைத்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் நிறுவும் பயன்பாடுகளின் எண்ணிக்கை போன்ற உங்கள் கணக்கு குறித்த புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.
  • உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றலாம்
  • உங்கள் கணக்கின் அணுகலை இடைநீக்கம் செய்யலாம் அல்லது முடிக்கலாம்
  • பொருந்தக்கூடிய சட்டம், கட்டுப்பாடு, சட்டரீதியான செயல்முறை அல்லது அமல்படுத்தக்கூடிய அரசுக் கோரிக்கையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உங்கள் கணக்குத் தகவலைப் பெறலாம்.
  • உங்கள் தகவலை நீக்க அல்லது திருத்துவதற்கான உங்களின் திறன் அல்லது தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்.

Google ஏன் உங்கள் தகவல்களைப் பகிரக்கூடும்?

நீங்கள் எங்களுக்கு அனுமதி வழங்கும்போது

உதாரணமாக, Google Assistantடைப் பயன்படுத்தி நீங்கள் பீட்சா ஆர்டர் செய்தால், உங்கள் பெயர் அல்லது மொபைல் எண்ணை உணவகத்துடன் பகிர்வதற்கு முன்பு உங்கள் அனுமதியைப் பெறுவோம். மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் தரவைப் பாதுகாப்பாகப் பகிர Google உங்களுக்கு எப்படி உதவுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி டொமைன் நிர்வாகிகளுடன்.

வெளிப்புறச் செயலாக்கங்களுக்கு, எங்களுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்கள் நாங்கள் வழங்கும் வழிமுறைகளின்படி தரவைச் செயலாக்க, தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வழங்குவோம். உதாரணமாக, வாடிக்கையாளர் சேவைகளில் எங்களுக்கு உதவ வெளிப்புற நிறுவனங்களைப் பயன்படுத்துகிறோம். அந்த நிறுவனங்கள் பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க தனிப்பட்ட தகவல்களை அவற்றிற்குப் பகிர வேண்டும்.

சட்டபூர்வ காரணங்களுக்கு

பின்வரும் காரணங்களுக்காகத் தனிப்பட்ட தகவல்களை Googleளைத் தவிர பிற நிறுவனங்களுக்குப் பகிர்வது அவசியம் என்று நாங்கள் நம்பினால் அவற்றைப் பகிர்வோம்:

  • பொருந்தக்கூடிய சட்டம், ஒழுங்குமுறை, சட்டரீதியான செயல்முறை போன்றவற்றுக்கு இணங்குதல் அல்லது நிறைவேற்ற வேண்டிய அரசாங்கக் கோரிக்கையை நிறைவேற்றுதல்.
  • சாத்தியமான மீறல்களின் விசாரணை உட்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு.
  • கண்டறிதல், தடுத்தல் அல்லது மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களை அணுகுவதற்கு
  • சட்டப்படி அவசியமென்றால் அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டால் எங்கள் பயனர்கள், பொதுமக்கள் மற்றும் Googleளின் உரிமைகள், சொத்து, பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தீங்கு ஏற்படாமல் பாதுகாத்தல்.

தரவும் பிரத்தியேகமாக்கலும்

என்னைப் பற்றிய எந்தெந்தத் தகவல்களை Google சேகரிக்கும்?

நீங்கள் Google சேவைகளைப் பயன்படுத்தும்போது அவற்றை உங்களுக்கு வழங்கவும், அவற்றை உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் மாற்றவும், Google ஏன் தரவைச் சேகரிக்கிறது? என்பதில் விவரிக்கப்பட்டுள்ள பிற காரணங்களுக்காகவும் எங்களுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்போம்.

நாங்கள் சேகரிக்கும் தரவையும் அவை பயன்படுத்தப்படும் விதத்தையும் அமைப்புகளுக்குச் சென்று நீங்கள் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, உங்கள் YouTube பதிவுகளை உங்கள் Google கணக்கில் சேமிக்க வேண்டாம் என்று விரும்பினால் YouTube பதிவுகளை நீங்கள் ஆஃப் செய்துகொள்ளலாம். Google எதைச் சேமிக்க வேண்டும் என்பதை நான் எப்படித் தீர்மானிப்பது? என்பதைப் பாருங்கள்.

தரவு என்றால் என்ன?

நீங்கள் எங்களுக்கு வழங்குகின்ற, தனிப்பட்ட முறையில் உங்களை அடையாளம் காட்டக்கூடிய தகவல்களே உங்கள் தனிப்பட்ட தகவல்களாகும் (உங்கள் பெயர், ஈமெயில் முகவரி போன்றவை). Google உங்களுடன் தொடர்புபடுத்தக்கூடிய பிற தரவும் இதிலடங்கும் (உங்கள் Google கணக்கில் நாங்கள் உங்களுடன் தொடர்புபடுத்தும் தகவல்கள் போன்றவை).

உங்கள் தனிப்பட்ட தகவல்களில் இரு வகையான விஷயங்கள் அடங்கும்:

நீங்கள் வழங்குபவை அல்லது உருவாக்குபவை

நீங்கள் Google கணக்கை உருவாக்கும்போது உங்கள் பெயர், கடவுச்சொல் போன்ற தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு வழங்குவீர்கள்.

நீங்கள் உருவாக்கும், பதிவேற்றும் அல்லது பிறரிடமிருந்து பெறும் உள்ளடக்கத்தையும் (ஈமெயில் மெசேஜ்கள், படங்கள் போன்றவை) சேமிக்கலாம்.

Googleளில் உங்கள் செயல்பாடுகள்

சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்க எங்கள் சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நாங்கள் சேகரிப்போம். நீங்கள் தேடும் வார்த்தைகள், பார்க்கும் வீடியோக்கள், யாரைத் தொடர்புகொள்கிறீர்கள், உள்ளடக்கத்தை யாருடன் பகிர்கிறீர்கள், Chrome பிரவுசிங் பதிவுகள் போன்றவை இதில் அடங்கும்.

Google சேவைகளை அணுக நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ், பிரவுசர்கள், சாதனங்கள் ஆகியவை குறித்த தகவல்களை நாங்கள் சேகரிப்போம். உங்கள் சாதனத்தின் பேட்டரி குறைவாக இருக்கும்போது திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது போன்ற அம்சங்களை வழங்க இது எங்களுக்கு உதவும்.

நீங்கள் படிப்படியான வழிகள் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தும்போது உங்கள் இருப்பிடத் தகவலைச் செயலாக்குவோம். கூடுதல் விவரங்களுக்கு இருப்பிடம் பிரிவைப் பார்க்கவும்.

Google ஏன் தரவைச் சேகரிக்கிறது?

எங்கள் சேவைகளை வழங்குவதற்காகவும் அவற்றை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்காகவும் ‘தரவை நாங்கள் பயன்படுத்தும் வழிகள்’ என்பதில் விவரிக்கப்பட்டுள்ள பிற காரணங்களுக்காகவும் எங்களுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்போம்.

உதாரணமாக, நீங்கள் போக வேண்டிய இடத்திற்கான டிராஃபிக் இல்லாத வழியை வழங்க Google Mapsஸால் உதவ முடியும். அது உங்கள் இருப்பிடம் குறித்த தகவல்களை (உங்கள் தரவு) பொதுத் தரவுடன் (வரைபடங்களும் பொது இடங்கள் குறித்த தகவல்களும்) இணைப்பதன் மூலம் இதைச் செய்கிறது.

தரவை நாங்கள் பயன்படுத்தும் வழிகள்

எங்கள் சேவைகளை வழங்குவதற்காக

எங்கள் சேவைகளை வழங்க தரவைப் பயன்படுத்துகிறோம் (நீங்கள் தேடும் வார்த்தைகளைச் செயலாக்கி அவற்றுக்கான முடிவுகளைத் தருவது போன்றவை).

எங்கள் சேவைகளை நிர்வகிக்கவும் மேம்படுத்துவதற்காக

எங்கள் சேவைகளைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் தரவு உதவுகிறது. உதாரணமாக, எங்களால் தடங்கல்களைக் கண்காணிக்க முடியும். மேலும், எந்தெந்தத் தேடல் வார்த்தைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழையுடன் டைப் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் எங்கள் சேவைகள் முழுவதிலும் எழுத்துப் பிழை சரிபார்ப்பான் அம்சங்களை எங்களால் மேம்படுத்த முடியும்.

புதிய சேவைகளை மேம்படுத்துவதற்காக

புதிய சேவைகளை உருவாக்க தரவு எங்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, நாங்கள் முதன்முதலில் படங்களுக்கென வெளியிட்ட Picasa ஆப்ஸில் மக்கள் தங்கள் படங்களை எப்படி ஒழுங்கமைக்கின்றனர் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தத் தரவைப் பயன்படுத்தி நாங்கள் Google Photos ஆப்ஸை வடிவமைத்து வெளியிட இது உதவியது. மேலும், இந்தச் சேவைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் எங்கள் ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகள் உட்பட எங்கள் சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை நாங்கள் பயன்படுத்தலாம்.

விஷயம் மற்றும் விளம்பரங்கள் உள்ளடக்கிய தனிப்பயனாக்கிய சேவைகளை வழங்குவது

பிரத்தியேக உள்ளடக்கத்தை (உதாரணமாக, நீங்கள் விரும்பக்கூடிய வீடியோக்களுக்கான பரிந்துரைகள்) வழங்க நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம். உங்கள் அமைப்புகளையும் வயதையும் பொறுத்து, உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் பிரத்தியேகமான விளம்பரங்களை நாங்கள் உங்களுக்குக் காட்டக்கூடும்.

செயல்திறனை அளவிடவும்

செயல்திறனை அளவிடுவதற்கும் எங்கள் சேவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் கூட நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்

உங்களைத் தொடர்புகொள்ளுதல்

சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறிந்தால் அது குறித்து அறிவிப்பை அனுப்ப உங்கள் ஈமெயில் முகவரியை நாங்கள் பயன்படுத்தக்கூடும்

Google, எங்கள் பயனர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல்

பயனர்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க (மோசடியைக் கண்டறிந்து தடுப்பது போன்றவை) நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்

பிரத்தியேகமாக்கலுக்கு Google எப்படித் தரவைப் பயன்படுத்துகிறது?

நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்தி எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் உங்களுக்கேற்றபடி பிரத்தியேகமாக்குகிறோம். உதாரணமாக:

  • நீங்கள் விரும்பக்கூடிய வீடியோக்களுக்கான பரிந்துரைகள்
  • Google சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் முறைக்கேற்ற பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் (பாதுகாப்புச் சரிபார்ப்பைப் பாருங்கள்)

விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும் நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம் (அமைப்பு ஆஃப் செய்யப்பட்டிருத்தல், குறிப்பிட்ட வயதினருக்கானவை என்று அமைக்கப்பட்டிருத்தல் போன்ற சூழல்கள் தவிர்த்து).

நான் பார்க்கும் விளம்பரங்களை Google பிரத்தியேகமாக்குமா?

முடிந்தவரையில் பயனுள்ள விளம்பரங்களையே நாங்கள் காட்ட முயல்கிறோம். ஆனால், குறிப்பிட்ட வயதினருக்கோ விளம்பரப் பிரத்தியேகமாக்கல் அமைப்பை ஆஃப் செய்துள்ளவர்களுக்கோ விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க மாட்டோம்.

இருப்பினும், பிரத்தியேகமாக்காமலேயே விளம்பரங்களைப் பயனுள்ளவையாக எங்களால் மாற்ற முடியும். உதாரணமாக, “புதிய ஷூக்கள்” என்ற தேடலுக்கான முடிவுகளைக் காட்டும் பக்கத்தைப் பார்க்கிறீர்கள் என்றால் அதில் ஒரு ஷூ நிறுவனத்தின் விளம்பரம் உங்களுக்குக் காட்டப்படக்கூடும். நேரம், உங்கள் பொதுவான இருப்பிடம், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தின் உள்ளடக்கம் போன்ற பொதுவான விஷயங்களைப் பொறுத்து விளம்பரம் காட்டப்படலாம்.

முழுக் கட்டுப்பாடும் உங்களிடமே உள்ளது

எனது கணக்கில் Google எதைச் சேமிக்க வேண்டும் என்பதை நான் எப்படித் தீர்மானிப்பது?

Photos போன்ற Google சேவையை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்கள் படங்களைக் காப்புப் பிரதி எடுத்து ஒத்திசைக்க வேண்டுமா என்பது போன்ற விஷயங்களில் நீங்கள் முடிவெடுக்க உதவுகின்ற அமைப்புகள் உள்ளன.

Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடு குறித்த தகவல்கள் உங்கள் Google கணக்கில் பதிவுகளாகச் சேமிக்கப்பட வேண்டுமா என்பதையும், உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க Google சேவைகள் உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தலாமா என்பதையும் நீங்கள் நிர்வகிப்பதற்கான அமைப்புகளும் உள்ளன.

Search சேவைகளில் பிரத்தியேகப் பரிந்துரைகள்

உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களின் (எ.கா. உங்கள் சுயவிவரத் தகவல், சேமிக்கப்படும் பதிவுகள் போன்றவை) அடிப்படையில் Search, Maps, Shopping, Hotels, Flights, Translate, News போன்ற Search சேவைகள் உங்களுக்குப் பிரத்தியேகப் பரிந்துரைகளை வழங்கலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உதாரணமாக, அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற AI பதில்களை Search சேவைகளால் வழங்க முடியும்.

Search Services History

Search சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டைச் சேமிக்கும். அதாவது, உங்கள் தேடல்கள், பொதுவான இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்கள் போன்றவை. Search சேவைகளில் உங்கள் அனுபவங்களைப் பிரத்தியேகமாக்க உங்கள் செயல்பாடு பயன்படுத்தப்படும். உதாரணமாக, டைப் செய்யத் தொடங்கியதும், நீங்கள் முன்பு தேடியவை பரிந்துரைகளாகக் காட்டப்படும். அத்துடன், AI மாடல்கள் உள்ளிட்ட Google சேவைகளையும் தொழில்நுட்பங்களையும் மேம்படுத்தவும் Google, அதன் பயனர்கள், பொதுமக்கள் ஆகியோரைப் பாதுகாக்கவும் உங்கள் Search சேவைப் பதிவுகள் தரவை Google பயன்படுத்தும்.

Play பிரத்தியேகமாக்கம்

உங்கள் அனுபவத்தை மேலும் பிரத்தியேகமாக்க, Play Storeரில் இருந்து நீங்கள் வாங்குபவை, பதிவிறக்குபவை போன்ற உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களை Google Play பயன்படுத்தலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உதாரணமாக, உங்களுக்குச் சிறந்த ஆப்ஸைப் பரிந்துரைக்க, நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸில் இருந்து தகவல்களை Google Play பெறக்கூடும்.

Play பதிவுகள்

Play செயல்பாட்டை (உங்கள் சாதனத்தில் நீங்கள் திறக்கும் ஆப்ஸ் விவரம் போன்றவை) உங்கள் Google கணக்கில் சேமிக்கும். Google சேவைகள் முழுவதிலும் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க இந்தச் செயல்பாடு பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, நீங்கள் தேடும் ஆப்ஸை விரைவாகக் கண்டறிய உதவுதல்

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு

Google TV போன்ற சில Google தளங்கள் மற்றும் ஆப்ஸில் உள்ள உங்கள் செயல்பாட்டைச் சேமிக்கும். இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்களும் இதில் அடங்கும். அத்துடன், Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டையும் ஒத்திசைக்கப்பட்ட Chrome பதிவுகளையும் இது சேமிக்கும். Google சேவைகளில் சிறப்பான பரிந்துரைகளையும் இன்னும் பிரத்தியேகமான அனுபவங்களையும் வழங்க உங்கள் செயல்பாடு பயன்படுத்தப்படும்.

YouTube பதிவுகள்

YouTubeஐப் பயன்படுத்தும்போது நீங்கள் பார்க்கும் வீடியோக்களையும் தேடும் விஷயங்களையும் சேமிக்கும். சிறந்த பரிந்துரைகளை வழங்குதல், விட்ட இடத்திலிருந்து வீடியோவைத் தொடர்ந்து பார்க்க உதவுதல் போன்றவற்றுக்கு உங்கள் YouTube பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

Gemini ஆப்ஸ் செயல்பாடுகள்

AI மாடல்கள் உட்பட Google சேவைகளை மேம்படுத்த உதவ, உங்கள் Gemini செயல்பாடுகளை (உரையாடல்கள், Geminiயுடன் நீங்கள் பகிரும் ஃபைல்கள், படங்கள் போன்றவை) Google பயன்படுத்தலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் நிறுத்திய இடத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் உரையாடல்களைத் தொடர அனுமதிப்பது போன்ற செயல்களைச் செய்யவும் உங்கள் Gemini ஆப்ஸ் செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

எனது தரவை எப்படி நீக்குவது?

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தரவை நீங்கள் நீக்கலாம். நீங்கள் நிரந்தரமாக நீக்கும் தரவு எங்கள் சிஸ்டங்களிலிருந்து அகற்றப்படும். இந்தத் தரவை எங்கள் சேவையகங்களில் இருந்து முழுமையாக அகற்றவோ உங்களுடன் தொடர்புபடுத்த முடியாத விதத்தில் மட்டும் வைக்கவோ கவனமான செயல்முறையைப் பின்பற்றுகிறோம்.

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை (நீங்கள் டைப் செய்த ப்ராம்ப்ட்டுகள், நீங்கள் தேடியவை, படித்தவை, பார்த்தவை போன்றவை) பார்க்க எனது செயல்பாடுகள் பக்கத்திற்குச் செல்லவும். குறிப்பிட்ட கால வரம்பிற்குட்பட்ட உங்கள் செயல்பாடுகளில் குறிப்பிட்ட சிலவற்றையோ எல்லாவற்றையுமோ நீங்கள் நீக்கலாம்.

உங்கள் செயல்பாடுகள் தானாகவே நீக்கப்படும்படியும் நீங்கள் அமைக்கலாம்.

எனது உள்ளடக்கத்தை எப்படிப் பதிவிறக்குவது?

ஈமெயில்கள், படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், தாள்கள், கருத்துகள், தொடர்புகள், கேலெண்டர் நிகழ்வுகள் போன்றவை உங்கள் உள்ளடக்கத்தில் அடங்கும்.

உங்கள் உள்ளடக்கத்திற்கான காப்பகத்தை உருவாக்க, உங்கள் தரவைப் பதிவிறக்குங்கள் என்பதற்குச் செல்லவும். உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுக்கவோ வேறு சேவையைப் பயன்படுத்த விரும்பும்பட்சத்தில் உள்ளடக்கத்தை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றவோ இது உதவும்.

வெளியேறிய பிறகு என்னிடம் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கும்?

நீங்கள் உள்நுழையாமல் இருக்கும்போதும்கூட Googleளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தேர்வுசெய்ய உதவும் கட்டுப்பாடுகள் உங்களிடம் இருக்கும். வெளியேறியிருக்கும்போது இந்த அமைப்புகளை மாற்ற g.co/privacytools பக்கத்திற்குச் செல்லவும்:

Search பிரத்தியேகமாக்கம்

மிகப் பொருத்தமான முடிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்க, இந்த பிரவுசரில் நீங்கள் மேற்கொள்ளும் Google தேடல்களைப் பயன்படுத்தும்.

YouTube தேடல் மற்றும் பார்வை பதிவுகள்

YouTubeஐ உங்களுக்கேற்றபடி பிரத்தியேகமாக்க, YouTubeல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை (நீங்கள் பார்க்கும் வீடியோக்கள், தேடும் விஷயங்கள் போன்றவை) பயன்படுத்தும்.

உங்கள் பிரவுசரில் உள்ள குக்கீகளில் சிலவற்றையோ எல்லாவற்றையுமோ நீங்கள் தடுக்கவும் முடியும். ஆனால், இதன் காரணமாக இணையம் முழுவதிலும் குறிப்பிட்ட சில அம்சங்கள் வேலை செய்யாமல் போகலாம். உதாரணமாக, குக்கீகளை ஆன் செய்திருந்தால் மட்டுமே பல இணையதளங்கள் உங்களை உள்நுழைய அனுமதிக்கும்.

குறிப்பிட்ட வயதினருக்கு நாங்கள் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதில்லை என்றாலும், பிரத்தியேக விளம்பரங்களைப் பார்க்க வேண்டுமா என்பதையும் வெளியேறிய பயனர்கள் தேர்வுசெய்யலாம்.

புதிய பக்கத்தில் திறக்கும்(அடிக்குறிப்பைத் திறக்கும்)
  • Afrikaans
  • Bahasa Indonesia
  • Bahasa Melayu
  • Català
  • Čeština
  • Dansk
  • Deutsch
  • Eesti
  • English
  • English (India)
  • English (United Kingdom)
  • Español
  • Español (Latinoamérica)
  • Euskara
  • Filipino
  • Français
  • Français (Canada)
  • Gaeilge
  • Galego
  • Hrvatski
  • Isizulu
  • Íslenska
  • Italiano
  • Kiswahili
  • Latviešu
  • Lietuvių
  • Magyar
  • Malti
  • Nederlands
  • Norsk
  • Polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • Română
  • Slovenčina
  • Slovenščina
  • Srpski
  • Suomi
  • Svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • অসমীয়া
  • Ελληνικά
  • Български
  • ଓଡିଆ
  • Русский
  • Српски
  • Українська
  • ‫עברית‬
  • ‫اردو‬
  • ‫العربية‬
  • ‫فارسی‬
  • አማርኛ
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • ไทย
  • 한국어
  • 中文 (香港)
  • 中文(简体中文)
  • 中文(繁體中文)
  • 日本語
Google ஆப்ஸ்
முதன்மை மெனு